சாலைக்கும் வளர்ச்சிக்கும் சம்பந்தம் இல்லை.. இரகசியத்தை உடைத்த பிரபலம்..? மக்களை மடை மாற்றி விட்டு உள்ளே நடக்கும் சதி..

Share:
இந்தியாவில் வளர்ச்சித் திட்டம் என்றுஅமைக்கப்பட்ட பாலங்கள், சாலைகள், அணைகள், அணு மற்றும் அனல் மின் நிலையங்கள் அனைத்துமே கிட்டத்தட்டஒன்றரை முதல் இரண்டு கோடி வரையிலான மக்களை வெளியேற்றி அமைக்கப்பட்டதுதான்.


இந்தியாவில் வளர்ச்சித் திட்டம் என்றுஅமைக்கப்பட்ட பாலங்கள், சாலைகள், அணைகள், அணு மற்றும் அனல் மின் நிலையங்கள் அனைத்துமே கிட்டத்தட்டஒன்றரை முதல் இரண்டு கோடி வரையிலான மக்களை வெளியேற்றி அமைக்கப்பட்டதுதான்.

இதில் அவர்களுக்கான இழப்பீடு, மாற்றுக் குடியிருப்புகள் உள்ளிட்டவற்றை அரசு வழங்கவில்லை.

அவர்களின் வாழ்வாதாரத்திற்கு எந்தவித வழியும் செய்து தரவில்லை. எட்டுவழிச் சாலை பற்றி தருமபுரி விவசாயி ஒருவர் கூறுகையில்,

‘‘என்னிடம்3.5 ஏக்கர் நிலம் இருந்தது. இதில் ஒரு ஏக்கர்முழுவதும் சாலை வருகிறது. மீதமுள்ள நிலத்தின் மத்தியிலும் அந்த சாலை வருகிறது. இதனால் எங்களுக்கு என்ன பலன்? எங்களுக்கு விவசாயத்தை தவிரவேறு எந்த வேலையும் தெரியாது.

விவசாயம் செய்யாதே, வேறு வேலைக்குச் செல் என்று சொன்னால், நாங்கள் தற்கொலை செய்து கொள்வதைத் தவிர வேறு வழியில்லை’’ என்று சொன்னார்.தமிழ்நாட்டில் இருக்கும் தொழில்நகரங்களுக்கும் நான்குவழிச்சாலைகளுக்கும் எந்த தொடர்பும் இல்லை.

தமிழகத்தில் உள்ள சிவகாசி, கோயம்புத்தூர், தூத்துக்குடி, ஓசூர், கடலூர் உள்ளிட்ட தொழில் நகரங்கள் அனைத்தும் நான்கு வழிச்சாலைத் திட்டத்தை கொண்டு வருவதற்கு முன்பு உருவானவை.

தமிழ்நாட்டில் தொழில் தொடங்க வரும் தொழிலதிபர்கள் யாரும் பிரம்மாண்டசாலைகளை நம்பி வருவதில்லை. தமிழகத்தில் உள்ள மனிதவளங்களை நம்பி மட்டுமே வருகின்றனர்.