நாங்க தயார்., தானே முன்வந்து கேட்ட ஓபிஎஸ்.!! அழைப்பாரா முக ஸ்டாலின்.!!

Share:
திமுக சார்பில் சென்னையில் மாநில சுயாட்சி மற்றும் தேசிய ஒருமைப்பாடு என்ற தலைப்பில் வருகிற ஆகஸ்ட் 30ம் தேதி பிரமாண்ட மாநாடு நடத்தப்பட இருந்தது. தற்போது கலைஞரின் மறைவினால் அந்த மாநாடு மாற்றப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக கலைஞர் புகழ் வணக்கம் கூட்டம் நடைபெறும் என திமுக அறிவித்துள்ளது.. 
திமுக தலைவர் கலைஞர் மறைந்த காரணத்தால் இந்த மாநில சுயாட்சி மாநாடு நடைபெறவில்லை. ஆனால் அதற்கு பதிலாக கலைஞர் புகழ் வணக்கம் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்திற்கு பாஜக தேசிய தலைவர் அமித் ஷாவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. மேலும், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. நாட்டின் பிற மாநில முன்னணி தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

தமிழகத்தை பொறுத்தவரை ஆளும் அதிமுகவை தவிர்த்து அனைத்து கட்சியினருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதில், பாஜகவின் தலைவர் அமித் ஷா வரும் 30 ஆம் தேதி வருவதாக அதிரடியாக தெரிவித்துள்ளார். 

இந்நிலையில், சற்றுமுன் செய்தியாளர்களை சந்தித்த ஓபிஎஸ், ''திமுகவின் 50 ஆண்டுகால தலைவர் கருணாநிதி, 5 முறை முதல்வராக இருந்துள்ளார். வரும் 30 ஆம் தேதி நடக்கும் கலைஞர் புகழ் வணக்கம் கூட்டத்திற்கு அதிமுகவை அழைத்தாள் கலந்துகொள்ள தயார்'' என்று ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.