ஊரை அடித்து உலையில் போட நினைத்த அரசு பேருந்தை.. துவைத்து காயபோட்ட பொதுமக்கள்: சில மாதங்களிலேயே அரங்கேறியிருக்கும் கூத்து..

Share:
அரசு பேருந்துகள் நஷ்டத்தில் இயங்குவதால் கடந்த ஜனவரி மாதம் பேருந்து கட்டணத்தை அரசு உயர்த்தியது.இதன்படி சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தால் இயக்கப்படும் சாதாரண பேருந்துகளில் குறைந்த பட்சமாக ரூ.5, அதிக பட்சமாக ரூ.23 என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது.

விரைவுப் பேருந்துகளில் குறைந்த பட்சமாக ரூ7, அதிக பட்சமாக ரூ.35, சொகுசுப் பேருந்துகளில் குறைந்த பட்சமாக ரூ.12 அதிக பட்சமாக ரூ.48 என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது.

கட்டணம் அதிகமாக உயர்த்தப்பட்டதால் பயணிகள் பலர் மின்சார ரயில், ஷேர் ஆட்டோக்கள், கால்டாக்சி என மாற்று போக்குவரத்தை நாடிச்சென்றனர்.
இதனால் மாநகர பேருந்துகளில் கூட்டம் குறைந்தது பயணிகள் அதிகம் பயணிக்காததால் பல்வேறு வழித் தடங்களில் காலியாகவே பேருந்துகள் சென்று வந்தன. எதிர் பார்த்த வருமானம் போக்கு வரத்துகழகத்துக்கு கிடைக்க வில்லை.இதனால் பயணிகளை மீண்டும், மாநகர பேருந்துகளுக்கு ஈர்க்கும் வகையில் சாதாரண கட்டண பேருந்துகளை அதிக அளவில் இயக்கி வருகிறார்கள்.

இது பற்றி போக்குவரத்துக் கழக அதிகாரி ஒருவர் கூறுகையில், சென்னையில் 1250-க்கும் மேற்பட்ட பேருந்துகள் இப்போது சாதாரண கட்டணத்தில் இயக்கப்படுகிறது.சொகுசுப் பேருந்துகள் காலியாக சென்று வருவதால் அந்த பேருந்துகளை சாதாரண பேருந்துகளாக மாற்றி வருகிறோம்.

அந்த வகையில் 500 டீலக்ஸ் பேருந்துகளை சாதாரண பேருந்துகளாக மாற்றி உள்ளோம். அதில் குறைந்த பட்ச கட்டணம் ரூ.5 என்று எழுதி வைத்துள்ளோம்.
இதனால் பயணிகள் மாநகர பேருந்துகளில் மீண்டும் அதிக அளவில் பயணம் செய்ய தொடங்கி உள்ளனர் என்றார்.