கேரள மக்களுக்காக சன் டிவி வழங்கிய நிவாரண தொகை!?

Share:
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்காக சன் தொலைக்காட்சி நிறுவனம் ரூ. 1 கோடியை நிவாரண நிதியாக வழங்கியுள்ளது. 

கடந்த சில நாட்களாக கேரளாவை சுற்றிலும் கடும் மழை பெய்து வருகிறது. இந்த மழையால் பெரும் வெள்ளம் ஏற்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்தியாவின் பிரபல நடிகர், நடிகைகள் பலரும் தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகின்றனர். 
                                                         watch sun news live 
தமிழில் விஜய் சேதுபதி, தனுஷ், சித்தார்த், சூர்யா, கார்த்தி மற்றும் நடிககள் நயன்தாரா, அமலாபால் என உள்ளிட்ட பலரும் பண உதவி செய்து வருகின்றனர். மேலும் மலையாள நடிகர்கள் மம்முட்டி உட்பட பலரும் பண உதவி செய்து வருகின்றனர். இந்நிலையில் பிரபல தமிழ் தொலைக்காட்சியான சன் நெட்வொர்க் கேரளாவில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக நிவாரண நிதியாக ரூ 1 கோடியை கேரளா முதலமைச்சரை நேரில் சந்தித்து அவரிடம் வழங்கப்பட்டது.