வாகன ஓட்டிகளுக்கு மனம் குளிரும் செய்தி.. ட்ராபிக் போலீசாருக்கு விடுக்கப்பட்ட அதிரடி உத்தரவு..?

Share:
வாகன சோதனை நடத்தும் போது, ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களின் செல்போன் பதிவு சான்றிதழ்களை அசல் ஆவணங்களாக கருதி ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ் சாலைத்துறை எழுதிய கடிதத்தின் நகலை தமிழக காவல்துறை டி.ஜி.பி. அலுவலகம் வெளியிட்டது.


அதில், போக்குவரத்து காவல்துறையினர், மோட்டார் வாகன துறையினர் வாகன சோதனை நடத்தும் போது, வாகன ஓட்டுநர்களிடம் அவர்களின் ஓட்டுநர் உரிமம், வாகன பதிவு சான்றிதழ், புதிய வாகனங்களின் காப்பீடு, வாகன காப்பீடு புதுப்பித்தல் சான்றிதழ் போன்ற ஆவணங்களை கேட்பது வழக்கமாக உள்ளது.

இதுபோன்ற ஆவணங்களை மத்திய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில் நுட்ப அமைச்சகத்தின் டிஜி லாக்கர் முறை அல்லது மத்திய சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலைத் துறை அமைச்சகத்தின் எம்-பரிவாஹன் முறையிலோ செல்போனில் பதிவு செய்யப்படும் நடைமுறை அமலில் உள்ளது.

இவ்வாறு பதிவு செய்யப்படும் ஆவணங்கள் 2000ஆம் ஆண்டு தகவல் தொழில் நுட்ப சட்டப்படி அசல் ஆவணங்களுக்கு இணையான ஆவணங்களாக கருதப்பட வேண்டும்.ஆனால் இந்த ஆவணங் களை அசல் ஆவணங்களாக வாகன சோதனை நடத்தும் அதிகாரிகள் ஏற்றுக்கொள்ள மறுப்பதாக புகார்கள் எழுந்துள்ளது.

வாகன சோதனை மேற்கொள்ளும் போக்குவரத்து காவல் துறையோ அல்லது மோட்டார் வாகன துறையினரோ, வாகன ஓட்டுநர்களிடம் மேற்கண்ட முறையில் செல்போனில் பதிவு செய்யப் பட்ட ஆவணங்களை அசல் ஆவணங்களுக்கு இணையாகக் கருதி ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.