திடீர் திருப்பம்! கட்சியை இழுத்து மூடும் விஜயகாந்த்? காரணம் இதுதான்

Share:
ஒரு காலத்தில் மாபெரும் கட்சியாக தமிழகத்தில் காலூன்றிய விஜயகாந்தின் தேமுதிக கட்சி. தற்போது ஆதரவு என்பது துளி கூட இல்லாமல் மிகவும் பின்தங்கிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

இன்றைய தினம் மக்களவை தேர்தல் நடந்தால் யார் வெற்றி பெறுவர்?, என்று தந்தி டிவி நடத்திய மாபெரும் கருத்துக்கணிப்பில் , திமுக- காங், அதிமுக உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றிருந்தன. ஆனால், விஜய்காந்தின் தேமுதிக கட்சி மற்றவை என்ற பட்டியலின் கீழ் இடம் பெற்றிருந்தது.

இவ்வளவு ஏன் கட்சிக்கு பெயரே வைக்காத ரஜினிகாந்தும் ரேஸில் இருந்து 5 சதவீத வாக்குகளை பெற்றுள்ளார். கட்சியை தொடங்கினாலும் மனம் போன போக்கில் செயல்படும் கமலும் 5 சதவீதம் பெற்றார். ஆர் கே நகர் இடைத்தேர்தலில் நோட்டாவுடன் போட்டியிட்ட பாஜகவுக்கு 3 சதவீதம் பெறும் என்று தெரியவந்துள்ளது. ஆனால் தேமுதிகவின் பெயர் அந்த கருத்து கணிப்பில் இடம் பெறவே இல்லை.

இந்நிலையில், மருத்துவ சிகிச்சைக்காக வெளிநாடு சென்றிருக்கும் தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த், எப்போது தமிழகம் திரும்பி வலுவிழந்த தேமுதிகவை எப்படி மீட்டெடுப்பார்? என்ற குழப்பத்தில் தேமுதிக ஆதரவாளர்கள் உள்ளனர், என்பது குறிப்பிடத்தக்கது.