புகைப்பிடிக்க பிக்பாஸ் வீட்டில் தனி அறை ! இதோ ஆதாரம்

Share:
சென்ற வருடம் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியும் இந்த வாரம் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கும் பல்வேறு சர்ச்சைகள் எழுந்த வண்ணம் இருக்கிறது. இந்நிலையில் போட்டியாளர்கள் செய்து வரும் பல அத்துமீறிய செயல்களால் ரசிகர்களுக்கு இந்த நிகழ்ச்சி மீதான அபிமானம் கொஞ்சம் குறைந்துள்ளது என்று தான் கூற வேண்டும்.


இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து இதுவரை வெளிவராத ஒரு புதிய சர்ச்சையான விசயம் ஒன்று இப்போது ஆதாரத்துடன் கிடைக்கப்பெற்றுள்ளது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சில போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டில் இருக்கும் ஸ்மோக்கிங் அறைக்கு சென்று புகைப்பிடிகின்றனர் என்பது தெரியும். குறிப்பாக மஹத் தான் ஸ்மோக்கிங் அறைக்கு தொடர் வாடிக்கையாளராக இருந்து வருகிறார்.



30 கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ள பிக் பாஸ் வீட்டில் குளியலறையிளும் மற்றும் ஸ்மோக்கிங் ரூம் எனப்படும் புகைபிடிக்கும் அறையில் மட்டும் தான் கேமரா பொருத்தபட வில்லை என்று நினைத்து வருகிறோம். இருப்பினும்,ஸ்மோக்கிங் ரூம் வழியாக பிக் பாஸ் வீட்டிற்கு வெளியே இருக்கும் நபர்களை நாங்கள் பார்த்திருக்கிறோம் என பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பின்னர் பேட்டி ஒன்றில் ரம்யா தெரிவித்திருந்தார்.





இந்த நிலையில் நேற்று ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் புகைப்பிடிக்கும் அறையின் முழு தோற்றமும் தெளிவாக தெரிந்தது. சமீபத்தில் பிக் பாஸில் கொடுக்கப்ட்ட ‘உன்னை போல் ஒருவன் ‘ என்ற டாஸ்கின் போது

மும்தாஜ் கதாபாத்திரத்தில் இருந்த மஹத், மும்தாஜின் உருவத்தை போல இருக்க வேண்டும் என்பதற்காக தன்னுடைய பின் இடுப்பிற்கு கீழே தலையணையை வைத்துக் கொண்டிருந்தார்.அந்த அறையில் அவருடன் ஐஸ்வர்யா, வைஷ்ணவி, யாஷிகா ஆகியோரும் நின்று கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் அந்த அறையில் அடுக்கடுக்காக பல்வேறு விதமான சிகரெட் பெட்டிகளும். ஒரு மண் குவிக்கப்பெற்ற தூணில், சிகரேட் சாம்பல் குவியல்களும் காணப்பட்டது. அதே போல் அந்த அறையில் நின்று கொண்டிருந்த யாஷிகாவின் கையிலும் சிகரெட் பெட்டியை வைத்திருந்தார்.





இத்தனை நாட்கள் போட்டியாளர்கள் சிலர் பிக் பாஸ் வீட்டில் புகைபிடிக்கிறார்கள் என தெரிந்தாலும் அந்த விசயத்திற்கு ஆதாரம் எதுவும் இல்லாமல் இருந்து வந்தது. இருப்பினும், தற்போது கிடைக்கப்பெற்றுள்ள இந்த புகைப்படம் மூலமாக போட்டியாளர்களுக்கு அடுக்கடுக்காக சிகரெட் பெட்டிகள் வழங்கப்படுகிது என மட்டும் மிகவும் தெளிவாக தெறிகிறது.

அதே போல இந்தியில் மட்டும் பிக் பாஸ் நிகழ்ச்சி 10 சீசன்களுக்கு மேல் கடந்து சென்றுள்ளது. இருப்பினும், இந்தி பிக் பாஸில் ஒரு சில போட்டியாளர்கள் புகைபிடிப்பதை தொலைக்காட்சிகளிலே ஒளிபரப்பினர். இந்நிலையில், தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் புகைப்பிடிப்பதை ஒலிபரப்பினால் மக்கள் மத்தியில் இருந்து பல வகையான எதிர்ப்புகள் எழும் என்பதால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் புகைபிடிக்கும் காட்சிகளை ஒளிபரப்புவதில்லை என்பது தான் நிதர்சனமான உண்மை.

பிக்பாஸ் ஸ்மோக்கிங் ரூம் பற்றிய கருத்துக்களை தெரிவியுங்கள். மறக்காமல் எங்களை follow பண்ணுங்க.. லைக் மற்றும் சேர் பண்ணுங்க.. நன்றி