Share:
கருணாநிதி நினைவேந்தல் கூட்டத்தில் பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா பங்கேற்பதாக எனக்கு எந்த தகவலும் தெரியவில்லை.

மேலும் சிலர் இதில் அரசியல் ஆதாயம் தேடுகிறார்கள். ப.ஜ.கா, தி.மு.க. கூட்டணி உருவாகுமா? என்பது குறித்து இப்போது எதுவும் சொல்ல முடியாது என்று மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். 
கருணாநிதி காவிரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதில் இருந்தே திமுகவை மெல்ல மெல்ல பாஜக நெருங்கி வருகிறது.

இது வெறுமனே யூகத்தின் அடிப்படையில் அமையாமல் அடுத்தடுத்து நடக்கும் சம்பவங்கள் இதனை உறுதிபடுத்தும் விதமாகவே அமைந்து வருகின்றன.

கருணாநிதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பொழுது எந்த உதவியானாலும் மத்திய அரசு செய்யும் என்று கூறியதில் இருந்து இதற்கான தொடக்கப்புள்ளி ஆரம்பமாகியுள்ளது.

அதன் பிறகு பல பாஜக தலைவர்கள் காவேரி மருத்துவமனைக்கு வந்து கருணாநிதியின் உடல் நலம் குறித்து விசாரித்துவிட்டு சென்றனர்.

கருணாநிதி இறந்த பின்பும் கூட தேசிய துக்க தினமாக ஒருநாள் கடைபிடிக்கப்பட்டது. மேலும் இதுவரை நாடாளுமன்ற உறுப்பினராக இல்லாத ஒருவருக்காக இரங்கல் தெரிவிக்கப்பட்டு நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன.

மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்திருந்தால் கூட இந்த அளவுக்கு மரியாதை கிடைத்திருக்குமா என்பது சந்தேகமே.

வருகின்ற ஆகஸ்ட் 30 ஆம் தேதி கருணாநிதிக்கு நினைவேந்தல் நிகழ்வு நடைபெற உள்ளது. இதற்கு பல பாஜக தலைவர்களுக்கும், பாஜக தேசிய தலைவர் அமித் ஷா-விற்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதனை திமுக தொண்டர்கள் மத்தியில் உரையாற்றும் ஒரு நல்ல வாய்ப்பாக பாஜகவினர் பார்க்கின்றனர்.

இந்த நிலையில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அஸ்தி நேற்று கன்னியாகுமரி கடலில் கரைக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் பத்திரிகையாளர்களிடம் கூறுகையில், கருணாநிதி நினைவேந்தல் கூட்டத்தில் பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா பங்கேற்பதாக எனக்கு எந்த தகவலும் தெரியவில்லை.

சில அரசியல் கட்சிகள் எரிகிற வீட்டில் கிடைத்தது லாபம் என பிடுங்குவது போல் இதனை பெரிதாக்கி அரசியல் ஆதாயம் தேட பார்க்கிறார்கள்.

பா.ஜனதா, தி.மு.க. கூட்டணி உருவாகுமா? என்பது குறித்து இப்போது எதுவும் சொல்ல முடியாது." என்று அவர் கூறியுள்ளார்.