ஏடிஎம்களில் இனி பணம் நிரப்பப்படாது - மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பால் அதிர்ச்சி..!!

Share:
ஏடிஎம் மற்றும் ஏடிஎம்களில் பணம் நிரப்பும் வாகனங்கள் மீதான தாக்குதல்கள் சமீப காலமாக அதிகரித்துக்கொண்டே வருகிறது. அதிலும் குறிப்பாக இரவு நேரத்தில் கொள்ளை சம்பங்கள் அதிகமாக நடந்து வருகிறது. 
இதுபோன்ற குற்றங்களை தடுக்க மத்திய உள்துறை அமைச்சகம் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, ஏடிஎம்களில் பணம் நிரப்பும் நேரம் வரையறை செய்யப்பட்டுள்ளது.

கிராமப் பகுதிகளில் உள்ள வங்கி ஏடிம்களில் மாலை 6 மணிக்குள் பணத்தை நிரப்ப வேண்டும் . அதேபோல், நகர்புறங்களில் அமைத்துள்ள வங்கி ஏடிம்களில் இரவு 9 மணி வரையும், நக்சல் பாதிப்பு உள்ள பகுதிகளில் உள்ள ஏடிஎம்களில் மாலை 4 மணி வரை மட்டுமே பணம் நிரப்ப வேண்டும் என உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.