விமானத்தில் பயணிப்பவர்களுக்கு இனி பிஸ்கட் பாக்கெட் மட்டுமே..

Share:
ஏர் இந்தியா விமானத்தில் பயணிப்பவர்களுக்கு இனி சாண்ட்விச், சமோசாக்களுக்கு பதிலாக பிஸ்கட் பாக்கெட் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 


ஏர் இந்தியா விமானத்தில் 1 மணி நேரம் வரையில் பயணம் செய்பவர்களுக்கு சமோசா, சாண்ட்விச், தண்ணீர் பாக்கெட் ஆகியவை உணவாக வழங்கப்பட்டு வந்தது. அவ்வாறு வழங்கப்படும் உணவுகள் எளிதில் கெட்டு போய்விடுவதாகவும், சில நேரங்களில் நாற்றம் அடிப்பதாகவும் குற்றச்சாட்டுக்கள் வந்தது. 


இதனயைடுத்து, உணவு பட்டியலை புதுப்பித்த ஏர் இந்தியா நிறுவனம், இனி விமானத்தில் 1 மணி நேரம் பயணம் செய்யும் பயணிகளுக்கு சாண்ட்விச், சமோசா வழங்கபடாது என்றும் அதற்கு பதிலாக பிஸ்கட் பாக்கெட், வேர்கடலை பாக்கெட் போன்றவை வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


பாக்கெட்டுக்களில் வழங்கப்படும் இந்த உணவுபொருட்கள், விமானம் ஏறுவதற்கு முன்பாக வாசலில் வைக்கப்படுமாம். பயணிகள் விரும்பினால் அங்கேயே வைத்து சாப்பிடலாம். அல்லது கொண்டு போக விரும்பினால், ஊழியர்களிடம் தெரிவித்து விட்டு எடுத்துச் செல்லவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.