ஜியோபோன் 2 அடுத்த பிளாஷ்சேல் அறிவிப்பு

Share:
ஜியோவின் இரண்டாவது மாடல் போனிற்கு ஆகஸ்டு 30ம் தேதி ஃபிளாஷ்சேல் விற்பனை அறிவிக்கப்பட்டுள்ளது.கடந்தாண்டு தீபாவளி ஒட்டி ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோபோன் அறிமுகப்படுத்தப்பட்டது. அடிப்படை வசதிகள் மட்டும் உள்ளடக்கிய இந்த மொபைல், ரூ.1500 வைப்புத் தொகைக்குக் கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டது.

Jio announced that the JioPhone 2 was sold out in minutes during its first flash sale and its second sale will take place on August 30 via Jio.com

தொடர்ந்து இரண்டாம் கட்டமாக முன்பதிவு இல்லாமலே நேரடியாக ஜியோ போன் விற்பனையை தொடங்கியது. ஜியோ அலுவலகம் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட கடைகளில் ஜியோ மொபைல் அந்த மொபைல் தற்போது விற்பனைக்கு உள்ளது. மேலும், ஸ்மார்ட்போனுக்கு நிகராக ஜியோ மொபைலிலும் கூகுள் அசிஸ்டெண்ட், கூகுள் மேப், யூடியூப் போன்றவை கொண்டுவரப்பட்டுள்ளது. 
இந்நிலையில், நேற்று ஜியோபோனிற்கு பிளாஷ்சேல் விற்பனை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து இதன் அடுத்த பிளாஷ்சேல் வரும் ஆகஸ்ட் 30ம் தேதி மதியம் 12 மணிக்கு தொடங்கும் என்று ஜியோ நிறுவனம் அறிவித்துள்ளது. ஜியோ போன் அறிமுகப்படுத்திய போது பல்வேறு சலுகை விலை அறிவிக்கப்பட்டது. ஆனால், தற்போது ஜியோபோன் 2க்கு எவ்வித சலுகையும் அறிவிக்கப்படவில்லை. இதற்கு ஜியோ சிம் தனியாக வாங்க வேண்டும். இந்த மொபைில் ஜியோ சிம் தவிர மற்ற நெட்வொர்க்குள் இயங்காது என்பது குறிப்பிடத்தக்கது.