82 வயது தாயை அடித்து துன்புறுத்தும் கொடூர மகன்: அதிர்ச்சி வீடியோ!!

Share:
மேற்குவங்க மாநிலத்தில் 82 வயது மூதாட்டியை தினமும் அவரது இளைய மகன் அடித்து துன்புறுத்தும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
82 வயது தாயை அடித்து துன்புறுத்தும் கொடூர மகன்: அதிர்ச்சி வீடியோ!!
மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்தவர் சாந்திபிரவா தேவி, இவருக்கு வயது 82. இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். கணவர் அரசு பணியில் இருக்கும்போதே மரணமடைந்துவிட்டார். அவரது பணி இவரது மூத்த மகன் விகாஷ்க்கு கிடைத்துள்ளது. பணி கிடைக்கவும், தனது தாயைப் பிறந்து மனைவி, குழந்தைகளுடன் கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்பு துத்தபுகுருக்கு விகாஷ் சென்று விட்டார். இதனால் தனது இளைய மகன் புலு பிரசாத் தேப்புடன் மூதாட்டி சாந்திபிரவா வசித்து வந்தார். 

இந்த நிலையில் தினமும் தனது தாயை புலு கொடுமைப்படுத்தி வந்துள்ளார். அனைத்து வேலைகளையும் அவரையே செய்யச் சொல்லியுள்ளார். காலால் எட்டி மிதித்துள்ளர். இதை பக்கத்து வீட்டில் வசிக்கும் பிரத்யஸா ராய் சவுத்ரி வீடியோவில் பதிவு செய்து தனது பேஸ்புக்கில் பதிவேற்றம் செய்துள்ளார். இது சமூக வலைதளங்களில் வேகமாக பரவியுள்ளது. இதையடுத்து போலீசார் புலுவை கைது செய்தனர். 
இதைத் தொடர்ந்து மூதாட்டி சாந்திபிரவாவை வடக்கு தும்தும் நகராட்சி பராமரித்து வருகிறது. மகனிடம் அடி வாங்கியும், தனது மகனை மன்னித்து விடுமாறு சாந்திபிரவா கெஞ்சியுள்ளார். ''பெத்த மனசு பித்து, பிள்ளை மனம் கல்லு'' என்பது இதுதானோ!!
VIDEO LINK HERE