கூகுளின் 5 லட்சம் உதவித்தொகை! உங்களுக்கும் வேண்டுமா இதை பண்ணுங்க!

Share:
கூகுள் நிறுவனம் அறிவிப்பு ஒன்றைத் திங்கள் அன்று வெளியிட்டுள்ளது. தனது புதிய டூடுல் 4 கிற்கான போட்டியில் பங்குபெறுமாறு இந்திய இளைஞர்கள் மற்றும் குழந்தைகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

இதன் படி "2018 Doodle 4 Google" லோகோ போட்டியின் டூடுலுக்கான இந்த ஆண்டு தீம் "what inspires you" உங்களை அதிகம் கவர்ந்தது எது என்பதை வரைந்து அனுப்ப வேண்டும். கூகுள் இன் G-o-o-g-l-e எழுத்துக்களை இணைத்து கிரையான்ஸ், களிமண், வாட்டர்கலர் மற்றும் கிராஃபிக் டிசைன் வடிவமைப்புகளைப் பயன்படுத்தி உருவாக்கலாம் எனக் கூகுள் அறிவித்துள்ளது.

இந்தப் போட்டியின் வெற்றியாளருக்கு, அவருடைய சிறந்த கலைப் படைப்பினை உலகிற்குப் பகிர்ந்துகொள்ளுவதற்கான வாய்ப்பு மற்றும் ரூ.5 லட்சம் கல்லூரி உதவித்தொகை வழங்கப்படுமென்று நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த வரைபட போட்டி வகுப்பு 1 முதல் 10 வரையான மாணவர்களுக்குத் திறந்திருக்கும் மற்றும் உங்களுடைய வரைப்படங்களை சமர்ப்பிக்க கடைசி தேதி அக்டோபர் 6 ஆம் தேதி எனக் கூகுள் நிறுவனம் கூறியுள்ளது.


குழந்தைகள் தினத்தன்று கூகுள் இன் முகப்பு பக்கத்தில்,வெற்றி பெட்ரா டூடுல் வரைபடம் இடம்பெறும் என்று கூகுள் தெரிவித்துள்ளது.

கூகிள் இன் ரியான் ஜெர்மிக் உட்பட டூடுல் அணித் தலைவர் மற்றும் பல விருந்தினர் நீதிபதிகள் கொண்ட குழு இந்த ஆண்டிற்கான உள்ளீடுகளை ஆய்வு செய்யும் எனவும் கூறப்பட்டுள்ளது.


குழுவினரால் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த 20 டூடுல் வரைபடங்கள் அக்டோபர் 23 முதல் நவம்பர் 5 வரை பொது மக்கள் வாக்களிப்பதற்கு வெளியிடப்படும். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு அதிக வாக்குகள் பெற்றவரைபடத்திற்கே வெற்றி பரிசு வழங்கப்படும் எனக் கூகுள் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

இதற்கு முன்பு 2009 இல் நடைபெற்ற 'டூடுல்4 கூகிள் இந்தியா' போட்டிக்கு 'மை இந்தியா' என்ற தீம் கொடுக்கப்பட்டது.

இந்தப் போட்டி கனடா, இலத்தீன் அமெரிக்கா மற்றும் பிற ஆசிய நாடுகளில் உள்ள பல பகுதிகளிலும் நடைபெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.


எனவே இந்த 5 லட்சத்திற்கான உதவித்தொகை மற்றும் உங்கள் கலைப்படைப்பிற்கான ஒரு சிறந்த வாய்ப்பு மேடை உங்களுக்கு வேண்டுமென்றால். உடனே உங்கள் வரைபடத்தைச் செதுக்க துடங்குங்கள். வாழ்த்துக்கள் பிரண்ட்ஸ்.