ஒரே நாளில் வெளியாகும் 10 தமிழ்ப் படங்கள்; அதுவும் நாளை; என்னென்ன படங்கள் தெரியுமா!

Share:
ஒரே நாளில் ஏராளமான தமிழ்ப் படங்கள் வெளியாக உள்ளன. வாரந்தோறும் வெள்ளிக் கிழமை அன்று, புதிய தமிழ்ப் படங்கள் திரையரங்குகளில் வெளியாகும். இந்நாளில் குறைந்த பட்ஜெட் படங்களும் வசூல் ஈட்டும் வகையில், தயாரிப்பாளர் சங்கம் சார்பில் ஒவ்வொன்றுக்கும் தேதிகள் குறித்து தரப்படுகின்றன. 

எனவே ஒருசில தமிழ் படங்கள் வெளியாவதே வழக்கமான ஒன்றாகும். இந்நிலையில் நாளை ஒரே நாளில் 10 தமிழ்ப் படங்கள் வெளியாகி, அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்த உள்ளது. மேலும் இந்த நடவடிக்கையால் தயாரிப்பாளர் சங்கம் மீதும், கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. அவை, 

1 - கஜினிகாந்த்

2 - மணியார் குடும்பம் 
3 - அரளி 
4 - கடிகார மனிதர்கள் 
5 - எங்க காட்டுல மழை 
6 - போயா 
7 - உப்பு புளி காரம் 
8 - காட்டு பய சார் இந்த காளி 
9 - கடல் குதிரைகள் 
10 - நாடோடி கனவு 
இந்தப் படங்களில் ஆர்யா, சயிஷா நடிப்பில் ஜெயக்குமார் இயக்கத்தில் உருவான படம் கஜினிகாந்த். இதுவே பெரிய நடிகரின் படமாக இருக்கிறது. ஞானவேல்ராஜா தயாரிப்பில் பாலமுரளி பாலு இசையமைப்பில் வெளியாகிறது. ஏற்கனவே ஹரஹர மஹா தேவகி, இருட்டு அறையில் முரட்டு குத்து ஆகிய படங்களை இயக்கியவர் ஜெயக்குமார்.