வாட்ஸ் அப் தகவல்களை 5 பேருக்கு மேல் ஃபார்வேர்டு செய்ய முடியாது

Share:
வாட்ஸ் அப் செயலில் இருக்கும் தகவலை அதிகபட்சமாக 5 பேர் மட்டும் மற்றவருக்கு ஃபார்வேர்டு செய்யும் வகையில் புதிய அப்டேஷன் விரைவில் பயன்பாட்டுக்கு வரவுள்ளது. 

only 5 users can sent the forward message in whatsapp new updates on processஉறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வாட்ஸ் அப்பில் அதிகம் பகிரப்படுவதால், இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் வன்முறை தலைதூக்கியுள்ளன. குறிப்பாக அப்பாவிகள் இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். 
வாட்ஸ் அப் வதந்தியால் தாக்குதலுக்கு உள்ளாகி அப்பாவிகள் பரிதாபமாக உயிரிழக்கும் நிலையும் ஏற்படுகிறது. இதை தடுக்கும் படி தக்க நடவடிக்கைகளை எடுக்க வாட்ஸ் அப் நிறுவனத்தை மத்தியரசு வலியுறுத்தியிருந்தது. 

அதனை தொடர்ந்து வாட்ஸ் அப்பில் ஃபார்வேர்டு தகவல்களை சுட்டிக்காட்டு வசதி ஏற்படுத்தப்பட்டது. எனினும் இது மத்தியரசிற்கு திருப்தி அளிக்கவில்லை. தொடர்ந்து இந்த நடவடிக்கையை மேம்படுத்தும் பணிகளை வாட்ஸ் அப் மேற்கொண்டு வந்தது.

அதன்படி, ஒரு தகவலை 5 பேருக்கு மேல் ஃபார்வேர்டு செய்ய முடியாத வகையில் புதிய வசதியை விரைவில் வாட்ஸ் அப் அறிமுகம் செய்யவுள்ளது. அது தொடர்பான சோதனை தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

இந்த திட்டம் விரைவில் பயன்பாட்டுக்கு வந்தால், வாட்ஸ் அப் பயனர்களுக்கு கிடைக்கும் தகவல்கள் ஃபார்வேர்டு மெசேஜ் என்பதை அவர்கள் தெரிந்துக்கொள்வார்கள். மேலும் 5 பேருக்கு மேல் ஒரு தகவலை ஃபார்வேர்டு செய்யவும் முடியாது. 

இதனால் வதந்தைகள் பரவாமல் இருப்பதோடு, பொதுமக்கள் மத்தியில் தேவையில்லாத பதட்டம் உருவாகாமல் தடுக்கப்படும். இம்மாத இறுதிக்குள் வாட்ஸ் அப் இந்த வசதியை பயன்பாட்டிற்கு கொண்டுவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.