ஆசியாவின் சிறந்த படமாக விஜய்யின் ‘மெர்சல்’ சர்வதேச பட விழாவில் பெருமிதம்

Share:
ஆசியாவின் சிறந்த படமாக விஜய் நடிப்பில் வெளியான ‘மெர்சல்’ படம் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டுள்ளது. 

தளபதி விஜய் நடிப்பில் 3 வேடங்களில் நடித்த ‘மெர்சல்’ திரைப்படம் பல்வேறு சர்ச்சைகளுக்கிடையே உலகம் முழுவதும் வெளியாகி சிறப்பான வரவேற்பை பெற்றதோடு, வசூலிலும் நல்ல வருவாய் ஈட்டியது. 

இப்படத்தில் இடம்பெற்ற பாடலாசிரியர் விவேக் எழுதிய “ஆளப்போறான் தமிழன்” பாடல் உலகளவில் நல்ல வரவேற்பை பெற்றது. 
உலகளவில் ஈர்த்ததால் உலக திரைப்பட விழாக்களில் ‘மெர்சல்’ படம் திரையிடப்பட்டு வருகின்றது. வரும் செப்டம்பர் 22ம் தேதி லண்டனில் நடைப்பெற உள்ள ஐஏஆர்ஏ விருதுக்கு மெர்சல் படம் பரிந்துரைக்கப்பட்டதால், அதில் நடித்த விஜய்யின் பெயர் ஹாலிவுட் நடிகர்களின் பட்டியலில் இடம்பெற்று அசத்தினார்.

இந்நிலையில் மெர்சல் படத்தை ஆசியாவின் சிறந்த படங்களில் ஒன்றாக தேர்வு செய்து திரைப்பட விழாவில் திரையிட்டுள்ளனர். தென் கொரியாவின் பூச்சியான் நகரில் நடந்த சர்வதேச திரைப்பட விழா 2018ல் மெர்சல் ஆசியாவின் சிறந்த படமாக தேர்வு செய்து திரையிட்டு பாராட்டு பெற்றுள்ளது.