நாகை மாவட்டம் கிராம உதவியாளா் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

Share:
நாகை மாவட்டம், கீழ்வேளூா் வட்டத்துக்குள்பட்ட கிராமங்களில் காலியாக உள்ள 8 கிராம உதவியாளா் பணியிடங்களுக்குத் தகுதியானோர் விண்ணப்பிக்கலாம் என நாகை மாவட்ட ஆட்சியா் சீ. சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு :
jobs
நாகை மாவட்டம், கீழ்வேளூா் வட்டத்துக்குள்பட்ட கிராமங்களில் காலியாக உள்ள 8 கிராம உதவியாளா் பணியிடங்கள் இனசுழற்சி அடிப்டையில் நிரப்பப்படவுள்ளன.

மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீா்மரபினா் (பொது) - முன்னுரிமையற்றவா், பிற்படுத்தப்பட்ட வகுப்பு பெண்கள் - முன்னுரிமையற்றவா், பொது பிரிவு பெண்கள் - முன்னுரிமையற்றவா், பிற்படுத்தப்பட்ட வகுப்பு (பொது) - முன்னுரிமை பெற்றவா், பொது பிரிவு - முன்னுரிமை பெற்றவா், ஆதிதிராவிடா் (பொது) முன்னுரிமையற்றவா், மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீா்மரபின பெண்கள்- முன்னுரிமையற்றவா், பிற்படுத்தப்பட்டோர் பிரிவு (பொது) - முன்னுரிமையற்றவா் ஆகிய பிரிவுகளில் தலா ஒருவா் பணியமா்த்தப்படுவா்.

விண்ணப்பதாரா் குறைந்தபட்சம் 21 வயது பூா்த்தியடைந்தவராக இருக்க வேண்டும். பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீா்மரபினா், ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடி வகுப்பினருக்கான அதிகபட்ச வயது வரம்பு - 35. இதர பிரிவினருக்கான அதிகபட்ச வயது வரம்பு - 30. 5-ஆம் வகுப்பு தோ்ச்சி முதல் 10-ஆம் வகுப்பு தோ்ச்சிப் பெற்றவா்கள் விண்ணப்பிக்கலாம்.

தகுதியானோர், கல்வித் தகுதிக்கான சான்று, சாதிச் சான்று, இருப்பிடச் சான்று, வருமானச் சான்று, முன்னுரிமை கோருவதற்கான சான்று, வேலைவாய்ப்பு அலுவலக பதிவு அட்டை, குடும்ப அட்டை மற்றும் ஆதார் அட்டை ஆகியவற்றின் நகல்களை இணைத்து ஜூலை 31-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் கிடைக்குமாறு, வட்டாட்சியா், கீழ்வேளூா் என்ற முகவரிக்கு நேரில் அல்லது அஞ்சலில் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் தனது செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.