கட்டணம் உயர்வு! தமிழக மக்களுக்கு ஷாக்கடிக்கும் தகவலை வெளியிட்ட மின் துறை அமைச்சர் தங்கமணி!

Share:
செலவினங்களை சமாளிப்பதற்காக புதிய மின் இணைப்பு பெறும் போது வசூலிக்கப்படும், காப்பீடு கட்டணத்தை உயர்த்த, மின் வாரியம் முடிவு செய்துள்ளது. 

புதிய மின் இணைப்பு வழங்கும் போது, நுகர்வோரிடம் பல்வகை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. பல்வகை கட்டணத்தில், பதிவு கட்டணம், மின் இணைப்பு கட்டணம், மீட்டர் காப்பீட்டு கட்டணம், வளர்ச்சி கட்டணம், ஆரம்ப மின் பயன்பாடு கட்டணம் ஆகியவை அடங்கும்.

புதிய மின் இணைப்பு பெறும் போது, ஒரே முறையாக, கட்டணம் வசூலிக்கப்படுகிறது.பின், மின்சாரம் பயன்படுத்துவதற்கு, இரு மாதங்களுக்கு ஒரு முறை, மின் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. தற்போது, நடைமுறையில் உள்ள பல்வகை கட்டணம், 2004ல், மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தால் நிர்ணயம் செய்யப்பட்டது.அதன்பின், பல ஆண்டுகளாகியும், அந்த கட்டணத்தை உயர்த்தவில்லை. 

இந்நிலையில் வீடுகளுக்கு புதிய மின் இணைப்பு பெறுவதற்கு டெபாசிட் தொகை உயர்த்தப்பட உள்ளதாக மின் துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். நாமக்கல் மாவட்டம் பரமத்தி சாலையில் உள்ள காவலர் குடியிருப்பில் சுத்திகரிப்பு குடிநீர் திட்டத்தை தொடங்கி வைத்த அவர், அப்போது பேசிய போது புதிய மின் இணைப்பு டெபாசிட் உயர்வு விகிதம் இன்னும் முடிவாகவில்லை என்று கூறியுள்ளார். 

இதனால் கட்டணம் உயர்வது உறுதியானாலும் எவ்வளவு தொகை எனபது இன்னும் உறுதி செய்யப்படவில்லை.