ரயில்வே பணிகளுக்காக, கம்ப்யூட்டர் அடிப்படையிலான முதல் தேர்வு, ஆக., 9ல் நடத்தப்பட உள்ளது

Share:
ரயில்வே பணிகளுக்காக, கம்ப்யூட்டர் அடிப்படையிலான முதல் தேர்வு, ஆக., 9ல் நடத்தப்பட உள்ளது.


ரயில்வே செய்தித் தொடர்பாளர், டில்லியில் கூறியதாவது:ரயில்வேயில், 26 ஆயிரத்து, 502 அசிஸ்டன்ட் லோக்கோ பைலட் பணிகளுக்காக, ஆக., 9ல் தேர்வுகள் நடக்கவுள்ளன. கணினி


அடிப்படையில் நடக்கும் இந்த தேர்வுகளில், 47.56 லட்சம் பேர் பங்கேற்கின்றனர்.

இந்த தேர்வுகளின் முதற்கட்டத்துக்கான, இணையதள இணைப்பு, 26ல் செயல்படுத்தப்படும். தேர்வுகளுக்கான, 'இ - கால்' கடிதங்களை, தேர்வர்கள், தேர்வுக்கு, நான்கு நாட்களுக்கு முன், இணையதளங்கள் மூலம், பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

தேர்வர்கள், ரயில்வே வேலைவாய்ப்பு இணையதளம் அளிக்கும், இணையதள இணைப்பு அல்லது, 'லிங்க்' மூலம்,தேர்வு நடக்கும் நகரம், தேதி, தேர்வு நடக்கும் நேரம், இ - கால் கடிதம் உள்ளிட்டவற்றை பெற்று கொள்ளலாம்.

பொது பிரிவு தேர்வர்களுக்கு, தேர்வு நேரம், 60 நிமிடங்களாகவும், மாற்று திறனாளிகளுக்கு, 80 நிமிடங்களாக இருக்கும். பல பதில்களில் ஒன்றை தேர்ந்தெடுக்கும் முறையில், 75 கேள்விகள் கேட்கப்படும். தவறான பதிலுக்கு எதிர்மறை மதிப்பெண் அளிக்கும் முறை பின்பற்றப்படும். இவ்வாறு அவர் கூறினார்.