நாடாளுமன்றத்தை அதிர வைத்த ராகுல் காந்தி!

Share:
நாடாளுமன்றத்தில் ஒன்றிய அரசின் மீதான நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீதான விவாதத்தில் ராகுல் காந்தி பேசிய பேச்சு பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

மக்களவையில் இன்று காலைமுதல் நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதையடுத்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பான விவாதத்தில் பங்கேற்று பேசினார்.
Image result for ராகுல் காந்தி
அப்போது மக்களுக்கு 15 லட்சம் ரூபாயை தருவேன் என்றீர்களே, அந்த பணம் எங்கே? என ராகுல் காந்தி கேஷுவலாக ஆரம்பித்தபோதே, இன்று அவைக்குள் புயல் அடிக்கப்போகிறது என்பதை அரசியல் பார்வையாளர்கள் உணர்ந்து கொண்டனர். "2 கோடி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு தருவதாக சொன்னீங்களே என்ன ஆச்சு? கடந்த ஓராண்டில் 4 லட்சம் வேலைவாய்ப்புகள்தான் உருவாகியிருக்கு. சீனா 24 மணி நேரத்திற்கு 50,000 பேருக்கு வேலைவாய்ப்பு தருகிறது.
நமது அரசு வெறும் 400 பேருக்குதான் தர முடிகிறது" என்று ரமணா விஜயகாந்த் பாணியில் புள்ளி விவரத்தோடு, அதே நேரம் இளைஞர்களின் ஏக்கத்தை தனது பேச்சில் வடித்தார் ராகுல் காந்தி. சாமானியனின் குரல் விவசாயிகள் வாங்கிய கடனை மோடி தள்ளுபடி செய்ய மாட்டாராம், தொழிலதிபர்கள் பெற்ற கடனை தள்ளுபடி செய்வாராம். உலகம் எங்கும் பெட்ரோல், டீசல் விலை குறையுமாம், ஆனால் தொழிலதிபர் நண்பர்களின் பாக்கெட்டை நிரப்புவதற்காக இந்தியாவில் மட்டும் பெட்ரோலிய பொருளின் விலை உயருமாம்.. என்னங்க சார் உங்க சட்டம்? என ராகுல் காந்தி கேட்டபோது, அவையில் இருந்த பிரதமர் மோடி அந்தபக்கமாக தனது முகத்தை திருப்பி கொண்டார். உரையை பார்த்த மக்களோ, "மகராசன்.. நமக்குள்ள இருக்குற சந்தேகத்தை அப்படியே கேட்குராறு பாரு" என்று வாய்க்குள் முனுமுனுத்தனர். பார்க்க வைத்த தந்திரம் இதையும் கவனித்தார் ராகுல் காந்தி. பாருங்கள்.. இங்கே பாருங்கள்.. மோடியால் எனது கண்களை நேருக்கு நேர் பார்க்க முடியவில்லை. அவர் முகத்தில் வலிந்து கொண்டுவரப்பட்ட சிரிப்பு இருக்கிறது. ஆனால், அவரிடம் நடுக்கத்தை என்னால் பார்க்க முடிகிறது.
பிரதமரின் பொய்களால்தான் அவரால் என்னை நேருக்கு நேர் பார்க்க முடியவில்லை என்று ராகுல் காந்தி கூறியதும், பிரதமருக்கு வேறு வழியே இல்லை. ராகுல் காந்தியின் மொத்த உரையின்போதும் மோடி ராகுல் காந்தியைத்தான் பார்க்க வேண்டியதாயிற்று. மீடியாக்களும், மொத்த நாடும் அதையேதான் செய்ய வேண்டியதாயிற்று. மோடியையே குழப்பிவிட்டாரே ராகுல் காந்தி உரையை துவக்கி ஆவேசம் காட்டியபோது, சிரித்தபடி அதை கடக்க முற்பட்டார் மோடி. ஆனால், ராகுலின் ஆவேசம் அதிகமானதும், வேறு பக்கம் திரும்பி பார்க்க முற்பட்டார். அதுவும் முடியாத நிலையில் இறுதியாக ராகுல் காந்தி உரைக்கு பாஜக எம்.பிக்கள் இடையூறு செய்ய பார்த்தனர். அவையை சில நிமிடங்கள் சபாநாயகர் ஒத்தி வைக்கும் நிலை உருவானது. ராகுல் காந்தி பேச்சால், அவை ஒத்தி வைக்கப்பட்டதே காங்கிரசுக்கு கிடைத்த வெற்றிதான்.
இதனிடையே உரையின் இறுதியில் பிரதமரை கட்டியணைத்து நட்பு பாராட்டினார் ராகுல் காந்தி. இதை சற்றும் எதிர்பார்க்கவில்லை அப்போது மோடி. கைகுலுக்கி அனுப்பி வைத்தார். ராகுல் காந்தியின் பேச்சு, நடவடிக்கை அனைத்துமே சமூக வலைத்தளங்களில் டிரெண்ட்டாகியுள்ளன.