வெள்ளி விலை வீழ்ச்சி!!!

Share:
ஆடி மாதம் என்பதால் வெள்ளியின் தேவை குறைந்ததால், வெள்ளி கிலோவுக்கு 1000 வரை விலை சரிந்துள்ளது.சேலம் சுற்றுவட்டார பகுதிகளில் வெள்ளிப்பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகிறது. கடந்த மாதம் முகூர்த்தங்கள் இருந்ததால், வெள்ளியின் தேவை அதிகமாக இருந்தது. இதன் காரணமாக வெள்ளியின் விலை உயர்ந்தது. ஆடி மாதம் தொடங்கியதில் இருந்தே வெள்ளியின் விற்பனை குறைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.இது குறித்து சேலத்தை சேர்ந்த வெள்ளி வியாபாரிகள் கூறியதாவது:
ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதத்தில் வெள்ளி பொருட்களின் விலை குறையும்.ஆடி மாதம் என்பதால் முகூர்த்தங்கள் இல்லை. இதன் காரணமாக வெள்ளி பொருட்களின் விற்பனை குறைந்துள்ளது. இதனால், வெள்ளியின் விலை சரிந்துள்ளது.

கடந்த மாதம் ஒரு கிலோ வெள்ளி 40,500 என விற்றது. தற்போது கிலோவுக்கு 1000 சரிந்து, 39,500 என விற்பனை செய்யப்படுகிறது.வரும் செப்டம்பர் 13ம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, 10 கிராம் முதல் 30 கிராம் எடையுள்ள விநாயகர் உருவம் பதித்த வெள்ளி நாணயம் உற்பத்தி தொடங்கியுள்ளது. விநாயகர் சதுர்த்திக்கு இன்னும் ஒன்றரை மாதம் இருப்பதால், உற்பத்தி செய்யப்படும் விநாயகர் நாணயங்களை அவ்வப்போது தமிழகத்தின் பல பகுதிகளுக்கும், வடமாநிலங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பி வருகிறோம்.இவ்வாறு வியாபாரிகள் கூறினர்.