கேஸ் சிலிண்டரில் காணப்படும் இந்த நம்பர் எதை குறிக்கிறது என என்றாவது யோசித்தது உண்டா?

Share:
இன்றைய காலக்கட்டத்தில் பெரும்பாலான வீடுகளில் சமையலுக்கு கேஸ் சிலிண்டர்கள் தான் உபயோகிக்கப்படுகின்றன. மண்ணெண்ணெய் அடுப்பு, விறகு அடுப்புகள் எல்லாம் மிகவும் பின்தங்கிய கிராமங்களில் மட்டும் தான் அதிகம் பயன்பாட்டில் காணப்படுகிறது.


கேஸ் சிலிண்டரின் விலை ஏற்ற வரலாறை எல்லாம் நன்கு அறிந்து வைத்திருக்கும் நமக்கு இத்தனை நாட்களாய் அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் ஒரு சின்ன இரகசியம் மட்டும் தெரியாமலேயே போய்விட்டது.

என்றாவது உங்கள் கேஸ் சிலிண்டரின் தலை பகுதியில் D-13, A-17, B-19 என்று பலவிதமான வெவ்வேறு எங்கள் குறிக்கப்பட்டிருக்கும். இது என்ன? இது எதை குறிக்கிறது? இதன் முக்கியத்துவம் என்ன என்பது குறித்து தான் நாம் இந்த கட்டுரையில் காணவிருக்கிறோம்...


எண்ணும், எழுத்தும்!

நாம் வீட்டில் பயன்படுத்தும் இந்த கேஸ் சிலிண்டர் தலை பகுதியில் மூன்று கம்பிகள் இருக்கும். அதன் ஒரு கம்பியின் உட்புறத்தில் மட்டும் எண்ணும், எழுத்தும் கொண்ட ஒரு டிஜிட் குறியீடு இருக்கும். பெரும்பாலும் இவை A,B,C,D, என்ற நான்கு எழுத்துகளில் எவையேனும் ஒன்றை கொண்டு துவங்கி அதை தொடர்ந்து ஒரு ஐஃபன் குறியுடன் இரண்டு இலக்கத்தில் 12, 13, 14, 15 என ஏதேனும் எண் குறிக்கப்பட்டிருக்கும்.


கேஸ் சிலிண்டரில் குறிக்கப்பட்டிருக்கும் இந்த A,B,C,D என்ற நான்கு எழுத்துக்கள் உண்மையில் மாதங்களை குறிக்கின்றன. A என்பது ஜனவரி, பிப்ரவரி, மார்ச் மாதங்களையும், B என்பது ஏப்ரல், மே, ஜூன் என்ற மாதங்களையும், C என்பது ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் என்ற மாதங்களையும், D என்பது அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களையும் குறிக்கின்றன.


இரண்டு இலக்க எண்கள்!

இது போக ஆங்கில எழுத்துடன் சேர்த்து ஒரு இரண்டு இலக்க எண்ணும் அந்த குறியீட்டில் இடம் பெற்றிருக்கும். அதாவது, A - 13, B - 15, C- 12, D - 18 என அந்த குறியீடுகள் இருக்கும். இந்த இரண்டு இலக்க எண்கள் உண்மையில் வருடத்தை குறிக்கின்றன. 13 என்றால் 2013ம் ஆண்டு, 15 என்றால் 2015ம் ஆண்டு என்று பொருள்.


எதற்கு?

சரி! இந்த மாதமும், வருடமும் எதை குறிக்கிறது என்ற சந்தேகம் உங்களுக்கு எழலாம். பொதுவாக மாதமும் வருடமும் எதை குறிக்கும்...? ஆம்! காலாவதி காலத்தை தான் குறிக்கிறது. இந்த குறியீடு!

உதாரணமாக: A - 13, B - 15, C- 12, D - 18போன்றவற்றை எடுத்துக் கொண்டால்...

A - 13 = அந்த கேஸ் சிலிண்டர் 2013ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் இருந்து மார்ச் மாதத்திற்குள் காலாவதி ஆகிவிடும் என்று பொருள்.

B - 15 = அந்த கேஸ் சிலிண்டர் 2015ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இருந்து ஜூன் மாதத்திற்குள் காலாவதி ஆகிவிடும் என்று பொருள்.

C- 12 = அந்த கேஸ் சிலிண்டர் 2012ம் ஆண்டு ஜூலை மாதத்தில் இருந்து செப்டம்பர் மாதத்திற்குள் காலாவதி ஆகிவிடும் என்று பொருள்.

D - 18 = அந்த கேஸ் சிலிண்டர் 2018ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் இருந்து டிசம்பர் மாதத்திற்குள் காலாவதி ஆகிவிடும் என்று பொருள்.


சிவப்பு நிறம் ஏன்?

சரி! பெரும்பாலும் கேஸ் சிலிண்டர்கள் சிவப்பு நிறத்தில் இருப்பது ஏன் தெரியுமா? சிவப்பு நிறமானது தொலைவில் இருந்தாலும், இருட்டில் இருந்தாலும் எளிதாக தெரியும். சிறு விபத்து ஏற்பட்டாலும் வெடித்துவிடும் அபாயம் கேஸ் சிலிண்டரில் இருப்பதால் தான் பெரும்பாலும் அந்த விபத்தை தவிர்க்க சிவப்பு நிறத்தை பயன்படுத்துகிறார்களாம்.


வாசம் இல்லை!

உங்களுக்கு இன்னொரு உண்மை தெரியுமா? நாம் பயன்படுத்தும் எல்.பி.ஜி சிலிண்டரில் இருக்கும் கேஸ்க்கு வாசனை இல்லை. ஆனால், வீட்டில், சாலை ஓரத்தில், கடைகளில் ககேஸ் சிலிண்டரில் இருந்து ஒரு வாசனை வரும். அது கடுமையாகவும் இருக்கும்.

அந்த வாசனை Ethyl Mercaptan, இதை LPG சிலிண்டர்கேஸில் வேண்டுமென்றே சேர்க்கிறார்கள். அதனால் தான் கேஸ் லீக்கானால் நம்மால் கண்டறியப்படுகிறது. இல்லையேல், வாசனை அற்ற LPG கேஸ் சிலிண்டர் லீக்கானாலும் வாசனை வராது, இதனால் விபத்துக்கள் ஏற்படும் அபாயம் நேரிடும்.


எடை என்ன?

வீடுகளுக்கு சப்ளை செய்யப்படும் கேஸ் சிலிண்டர்களின் எடையானது 14.2. வேறு சில கேஸ் சிலிண்டர்கள் அந்தந்த தயாரிப்பு நிறுவனங்கள் சார்ந்து எடையில் வேறுபாடு இருக்கும். ஆனால், வீடுகளுக்கு சப்ளை ஆகும் கேஸ் சிலிண்டர்கள் 14.2 கிலோ எடை தான் இருக்கும்.

காலியான சிலிண்டரின் எடை 15.3 கிலோ இருக்கும். அது போககேஸின் எடை 14.2. ஆக., ஒரு முழுமையான கேஸ் சிலிண்டரின் முழு எடையானது 29.5 கிலோ இருக்கும் என்று கணக்கிடப்படுகிறது.