ஜியோவின் அடுத்த அதிரடி ஜியோ போன் 2 ஆகஸ்ட் 15 ம் தேதி அறிமுகம்

Share:
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்தின் 41வது வருடாந்திர பொதுக் கூட்டம் மும்பையில் இன்று நடைபெற்றது. இதில், இந்நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி பேசினார்.

அவரது உரையில் இடம்பெற்ற முக்கிய அம்சங்கள் : 

* கடந்த ஆண்டு பொதுக் கூட்டத்தின் போது ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ போன் அறிமுகம் செய்யப்பட்டது. இதே போன்று இந்த ஆண்டு, பிராட்பேண்ட் வசதியை தரும் ஜியோ ஜிகா பைபர் சர்வீஸ் என்ற வசதி அறிமுகம் செய்யப்பட உள்ளது.
* இந்த அல்ட்ரா பிராண்பேண்ட் சேவை மூலம் அதிக வேக விளையாட்டுக்கள், வீடியோக்கள், டவுண்லோட் மற்றும் அப்லோட், வேலைகள் உள்ளிட்டவைகளை மில்லி செகண்ட்டில் முடிக்க முடியும். 
* அதிவேகமாக தொலைத் தொடர்பு சேவை வழங்கும் நிறுவனமாக ஜியோவை டிராய் தேர்வு செய்துள்ளது.இந்த ஆண்டு ஏப்ரல் மாத இறுதியில் ஜியோ வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 196.19 மில்லியனாக அதிகரித்துள்ளது.
* ஜியோ வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை ஒரே ஆண்டில் இருமடங்காகி உள்ளது. ஒரு மாதத்தில் ஜியோ டேட்டா பயன்பாடு 125 கோடி ஜிபி.,யில் இருந்து 450 கோடி ஜிபி.,யாக அதிகரித்துள்ளது.
* குரல் மூலம் வைபை செயல்படுத்தும் முறையை ஜியோ கொண்டு வந்துள்ளது. விரைவில் இந்த தொழில்நுட்பம் அனைத்து இடங்களிலும் பயன்படுத்தப்பட உள்ளது. இதற்கு மத்திய அரசும் ஒப்புதல் அளித்துள்ளது. வைபை மூலம் போன் அழைப்புக்கள் செய்யும் வசதியும் துவங்க உள்ளது.
* ரிலையன்ஸ் இண்ட்ஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் மார்ச் மாத நிகர லாபம் ரூ.9459 கோடியாக அதிகரித்துள்ளது. இது முந்தைய ஆண்டை விட 17 சதவீதம் அதிகம். இதனால் வருவாய் ரூ.1.29 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. 
* இது ரிலையன்ஸ் நிறுவனத்தின் பொற்காலம் என்றே சொல்லலாம். நிகர லாபம் 20.6 சதவீதம் உயர்ந்து ரூ.36,075 கோடியாக உள்ளது. கடந்த 22 மாதங்களில் ஜியோ வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 215 மில்லியன்களை பெற்றுள்ளது. வாடிக்கையாளர்கள் அதிகரிப்பில் இது புதிய சாதனையாகும். வாடிக்கையாளர்கள் ஒரு நாளைக்கு சராசரியாக 219 நிமிடங்களுக்கும் அதிகமான நேரம் ஜியோ சேவையை பயன்படுத்துகிறார்கள்.
* ஜியோ மற்றும் சில்லரை பங்குகளின் மதிப்பு 2 சதவீதத்தில் இருந்து 13 சதவீதமாக உயர்ந்துள்ளது. பிராட்பேண்ட் துறையில் ஏற்கனவே 250 மில்லியன் டாலர்களை முதலீடு செய்துள்ளோம். தற்போது பிராட்பேண்ட் சேவையை மேலும் 1100 நகரங்களுக்கு விரிவுபடுத்த உள்ளோம். இந்த சேவை மூலம் வீட்டின் வெளியில் இருந்த படியே ஒவ்வொரு குடிமகனும் வீட்டில் உள்ள சுவிட்கள் உள்ளிட்ட மின்சாதன பொருட்களையும் இயக்கத்தையும் கட்டுப்படுத்த முடியும். இதற்கான 24 மணி நேர அவசர உதவியும் வழங்கப்பட உள்ளது.

முகேஷ் அம்பானியின் உரையை தொடர்ந்து ஆகாஷ் அம்பானி மற்றும் இஷா அம்பானி ஆகியோர் ஜியோ போனில் புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள அம்சங்களை விளக்கினர். இதன்படி, ஜியோ போனில் வாய்ஸ் கமெண்ட் மூலம் தற்போது 20 கோடிக்கும் அதிகமானவர்கள் பயன்படுத்தி வருகிறார்கள். ஜியோ போனில் தற்போது யூட்யூப், பேஸ்புக், வாட்ஸ்ஆப் போன்ற சமூக வலைதள சேவைகள் வழங்கப்படுகின்றன.

இந்த சேவைகளையும் வாய்ஸ் சேவை மூலம் இயக்க முடியும். ஆகஸ்ட் 15 முதல் இந்த சேவை பயன்பாட்டிற்கு வர உள்ளது. ஜியோ போன் மூலம் மற்ற ஜியோ போன் மட்டுமின்றி பிற ஆண்டிராய்டு, ஐஓஎஸ் போன் பயன்படுத்துபவர்களுக்கும் தகவல் அனுப்ப முடியும்.

ஜியோ ஜிகா செட்-டாப் பாக்ஸ் சேவையும் வங்க உள்ளோம். இது தியேட்டரில் பார்ப்பது போன்ற 4 கே ரெசொல்யூசனில் படங்களை பார்க்க உதவும். இந்த செட் டாப் பாக்சை இந்தியாவின் பெரும்பாலான மொழிகளில் வாய்ஸ் கமாண்டிங் மூலம் இயக்க முடியும். இந்த செட் டாப் பாக்ஸ் மூலம் ஜியோ டிவி பயன்பாட்டாளர்கள், மற்ற ஜியோ டிவி பயன்பாட்டாளர்களை எந்த நேரமும் அழைக்க முடியும். ஜியோ இன்ஜினியர்கள் ஒரு மணி நேரத்திற்குள் ஸ்மார்ட் வீடுகளையும் தயார் செய்து வருவார்கள். 

திரும்ப பெறும் முறையை தொடர்கிறோம். ஆகஸ்ட் 1 முதல் பழைய ஜியோ போன்களை ரூ.501 என்ற ஆரம்ப விலையில் மாற்றிக் கொள்ளலாம். ஜியோ போன் 2 ஆகஸ்ட் 15 ம் தேதி அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதன் விலை ரூ.2001 ஆகும்.