ஜியோ ஜிகாஃபைபர் பிராட்பேன்ட் & ஜியோ ஜிகா செட்-ஆஃப் பாக்ஸ்- சிறப்பம்சங்கள்

Share:
ஜியோ ஜிகாஃபைபர் பிராட்பேன்ட் & ஜியோ ஜிகா செட்-ஆஃப் பாக்ஸ் சிறப்பம்சங்கள்

பலரும் எதிர்பார்த்திருந்த ஜியோ ஜிகாஃபைபர் பிரான்ட்பேன்ட் திட்டத்தை இன்று நடந்த ரிலையன்ஸ் வருடாந்திர கூட்டத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. 

ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஆண்டு பொதுக்குழு கூட்டம் மும்பையில் இன்று நடைபெற்றது. இதில் ஜியோ போன்2, ஜியோ ஜிகாஃபைபர் பிராட்பேன்ட் சேவை, ஜியோ ஜிகா செட்-ஆஃப் பாக்ஸ் உள்ளிட்ட புதிய திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டன. 

தற்போது ஜியோ ஃபைபர் என்ற இணையதள சேவையை  ஜிகாஃபைபர் என்ற பெயரில் அறிமுகமானது. இந்தியாவில் உள்ள வீடுகளுக்கு அதிவேகமான இன்டர்நெட் சேவையை வழங்கும் நோக்கத்தில் இது அறிமுகமானது. 

ஜியோ ஜிகாஃபைபர் பிரான்ட்பேன்ட் சேவையை வேண்டுபவர்கள் முதற்கட்டமாக MyJio அல்லது jio.com என்ற இணையதளங்களில் சென்று பதிவு செய்ய வேண்டும்.அதிவேகமாக இன்டர்நெட் சேவையை வழங்கும் இந்த திட்டம் இந்தியாவின் 1,100 நகரங்களில் பயன்பாட்டிற்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் 5 கோடி வீடுகளுக்கு இணைய சேவையை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. 
இந்த சேவையில் மூலம் நாட்டின் சிறந்த கல்வி முறையை கொண்டு வர ரிலையன்ஸ் குழுமம் முயற்சி செய்கிறது. கல்லூரிகளுக்கு ஜியோஜிகாபைபர் இணைப்பை ஏற்படுத்துவதும் மூலம் சர்வதேச சிறந்த வல்லுநர்களை ஆசியர்களாக பயன்படுத்திக் கொள்ள முடியும். 

தொடர்ந்து ஜியோஜிகாஃபைபர் மூலம் மருத்துவம் மற்றும் வேளாண்மை துறை வளர்ச்சியை அதிகப்படுத்தவும் முடியும் என ரிலையன்ஸ் தலைவர் அம்பானி தெரிவித்தார். 

இதற்கு வேண்டி இந்தாண்டு இறுதிக்குள் 7500 ரீடெயில் கடைகளை ரிலையன்ஸ் திறக்க முடிவு செய்துள்ளது. மேலும் இந்த கூட்டத்தில் பிராட்பேன்ட் சேவையில் சர்வதேச அளவில் இந்தியாவை முதல் 5 இடங்களுக்குள் கொண்டுவர ரிலையன்ஸ் உறுதி செய்தது. 

அதை தொடர்ந்து ஜியோ ஜிகா செட்-டாப் பாக்ஸ் அறிவிப்பை ஆகாஷ் அம்பானி, ஈஷா அம்பானி வெளியிட்டனர். இதில் 4K தொழில்நுட்பத்தில், திரையரங்குகளில் படம் பார்ப்பது போல அனுபவத்தை பெறலாம் என அவர்கள் தெரிவித்தனர்.