தேவையற்ற அழைப்புகளை தடுக்க உதவும் கூகுளின் ’போன்’ அப்ளிகேஷன்!

Share:
கூகுள் நிறுவனத்தின் ‘போன்’ அப்ளிகேஷன் மூலம் தேவையற்ற அழைப்புகளைத் தடுக்கலாம். 

கடந்த சில ஆண்டுகளாக நமது தொலைபேசிக்கு வரும் தேவையற்ற மற்றும் தொல்லை தரும் அழைப்புகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த ஏராளமான மொபைல் அப்ளிகேஷன்கள் இருக்கின்றன. இருப்பினும் பிரச்சனை முற்றிலும் ஓய்ந்தபாடில்லை. இந்நிலையில் இதனை கூகுள் நிறுவனம் கையில் எடுத்துள்ளது. 

கடந்த ஏப்ரல் மாதம், தொழில்நுட்ப ஜாம்பவனான கூகுள் ’போன்’ என்ற அப்ளிகேஷனை உருவாக்கி, பரிசோதனை அடிப்படையில் இயக்கி வருகிறது. இதில் ஸ்பாம் கால்களை பில்டர் செய்யும் புதிய அப்டேட்டை கொண்டு வந்துள்ளது. இதற்கு ‘காலர் ஐடி மற்றும் ஸ்பாம் பாதுகாப்பு’(Caller ID and Spam Protection) என்று பெயர். இதன்மூலம் தேவையற்ற கால்களை தானாகவே பிரித்து தடுத்துவிடலாம். 

இந்த ஆப் தேவையற்ற அழைப்புகளை நேரடியாக வாய்ஸ் மெயிலிற்கு அனுப்பி விடுகிறது. நீங்கள் ‘காலர் ஐடி மற்றும் ஸ்பாம் பாதுகாப்பு’ சேவை ஆனில் இருக்கும் போது, ஒரு அழைப்பை உருவாக்கும் போதும், பெறும் போதும் காண்டாக்ட் லிஸ்டில் இல்லாத அழைப்பாளர்கள் அல்லது தொழில் சார்ந்த அழைப்புகள் குறித்து அறிந்து கொள்ளலாம்.