கண்களுக்கு பாதிப்பில்லாமல் இரவில் கூகிள் குரோம் ப்ரௌசெர் பயன்படுத்துவது எப்படி?

Share:
உலகில் உள்ள பில்லியன் கணக்கானோர் கூகுள் குரோம் பிரெளசரைத்தான் ரெகுலராக பயன்படுத்தி வருகின்றனர். இரவில் அதிக நேரம் கம்ப்யூட்டரை பயன்படுத்துவதாக இருந்தால் குரோமில் உள்ள நைட்மோட் வசதியை பயன்படுத்தி கண்களை பாதுகாத்து கொள்ளலாம்.

இரவு நேரத்தில் பிரெளசாராக இருந்தாலும், செயலிகளை பயன்படுத்துவதாக இருந்தாலும் நைட்மோட் வசதியை பயன்படுத்துவது கண்களுக்கு மிகவும் பாதுகாப்பானது. நீங்கள் இதற்கு முன்னர் கூகுள் குரோமில் நைட் மோட் வசதியை பயன்படுத்தி உள்ளீர்களா? அப்படி இல்லை என்றால் உங்களுக்கு எப்படி பயன்படுத்த வேண்டும் என்று நாங்கள் சொல்லி தருகிறோம் கூகுள் குரோமில் நைட்மோட்-ஐ பயன்படுத்துவது எப்படி?முதலில் நைட்மோட் பயன்படுத்துவதால் உங்கள் கூகுள் குரோம் செட்டிங்கில் எந்தவித மாற்றமும் ஏற்படாது என்பதை தெரிந்து கொள்ளுங்கள். தற்போது நீங்கள் எக்ஸ்டென்ஷன் சென்று நைட்மோட் பிரெளசரை தேர்வு செய்து கொள்ள வேண்டும். இங்கு கூகுள் குரோம் எக்ஸ்டென்ஷன் மூலம் எப்படி நைட் மோட் வசதியை பயன்படுத்துவது என்பதை விரிவாக பார்ப்போம். இதற்கு நீங்கள் கீழே உள்ள வழிமுறைகளை பின்பற்றுங்கள்முதலில் கூகுள் குரோம் ஸ்டோர் சென்று அதன் ஹேக்கர் விஷனை கண்டுபிடியுங்கள்

அதில் 'ஆட் டு குரோம்' என்பதை க்ளிக் செய்யுங்கள்

அதில் கேட்கப்பட்டுள்ள விபரங்களை பதிவு செய்யுங்கள். அதன் பின்னர் உங்கள் கம்ப்யூட்டரின் கலர் மாறியதில் இருந்தே நீங்கள் நைட்மோட்க்கு மாறியுள்ளது தெரியும். ஒரே ஒரு க்ளிக் மூலம் நீங்கள் மீண்டும் நைட் மோட்-இல் இருந்து சாதாரண நிலைக்கு மீண்டும் மாறி கொள்ளலாம். மேலும் ஒரு எக்ஸ்டென்ஷன் உங்களுக்கு நைட்மோடில் டார்க் ரீடர் வசதியும் தரும். இந்த வசதி குறித்து தற்போது பார்ப்போம்


குரோம் ஸ்டோர் சென்று அதில் உள்ள டார்க் ரீடர் என்பதை சியர்ச் செய்யுங்கள்

அதில் 'ஆட் டு குரோம்' என்பதை கிளிக் செய்தால் உங்களுக்கு ஒரு பாப் அப் தோன்றும். அதில் உள்ள 'ஆட் எக்ஸ்டென்ஷன் என்பதை க்ளிக் செய்யுங்கள் 

அந்த எக்ஸ்டென்ஷன் இன்ஸ்டால் செய்த பின்னர் அதனை கிளிக் செய்யுங்கள். இப்போது உங்கள் டிஸ்ப்ளேவில் தோன்றும் டார்க் மோட் என்பதை க்ளிக் செய்யுங்கள். மேலும் உங்களுக்கு தேவையான இன்னும் சில மாற்றங்களையும் இதில் செய்து கொள்ள முடியும். அதாவது பிரைட்னெஸ், காண்ட்ராஸ்ட் ஆகியவை உள்பட ஒருசிலவற்றை நீங்கள் அட்ஜெஸ்ட் செய்து கொள்ளலாம். 


தற்போது நீங்கள் மாற்றம் செய்த வண்ணம் உங்கள் மானிட்டரில் தோன்றும். இதன் மூலம் ஃபேஸ்புக் உள்பட உங்கள் சமூக வலைத்தள பக்கங்களிலும் மாற்றம் செய்து கொள்ளலாம். 

மேலும் இந்த கூகுள் குரோமில் உள்ள எக்ஸ்டென்ஷன்கள் என்னவெனில் லைட்ஸ்களை டர்ன் ஆஃப் செய்வது, நைட் மோட் புரோ, அதிகமான காண்ட்ராஸ்ட், நைட் ஸ்க்ரீன், நைட் மோட், நைட் மோட் டேப் மற்றும் சிம்பிள் நைட் மோட் ஆகியவைகள் ஆகும்.