அதிரடி சலுகை மூலம் ஜியோ, ஏர்டெல்லுடன் மோதும் பிஎஸ்என்எல்!

Share:
இந்திய தொலை தொடர்பு சந்தையில் ஜியோ, ஏர்டெல், வோடாபோன், ஐடியா, பிஎஸ்என்எல் ஆகிய நிறுவனங்களுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்களுடன் பிஎஸ்என்எல்ளும் நேரடியாக சலுகை திட்டத்தில் மோதுகிறது.

ஜியோ பிரீபெய்டு வாடிக்கையாளர்கள் ரூ.198க்கு ரீசார்ஜ்செய்தால் அளவில்லா லோக்கல், எஸ்டிடி கால்கள், இந்தியா முழுக்க ரோமிங், 100 எஸ்எம்எஸூம் இலவசம் தினமும் 2ஜிபி டேட்டாவையும் சேர்த்து 28 நாட்களுக்கு பெற முடியும். 

ஏர்டெல் பிரீப்பெய்டு வாடிக்கையாளர்கள் ரூ.199க்கு ரீசார்ஜ் செய்து அளவில்லா அழைப்புகளையும், 1.4 ஜிபி டேட்டாவையும் 28 நாட்களுக்கு பெற முடியும். 


பிஎஸ்என்எல் நிறுவனமும் தனது பிரீப்பெய்டு வாடிக்கையாளர்களுக்கு ரூ.171க்கு பிளான் ஒன்றை அறிவித்துள்ளது. இதன் மூலம் அளவில்லா கால்களையும், ஒரு நாளைக்கு 2 ஜிபி டேட்டாவும், 100 எஸ்எம்எஸ்களையும் பிஎஸ்என்எல் வழங்குகிறது. இச்சலுகை 30 நாட்களுக்கு செல்லுபடியாகும்.