பன்னீர் செல்வம் சந்திப்பை நிர்மலா தவிர்த்தது ஏன்?

Share:
தானும் பன்னீர் செல்வமும் நிர்மலாவை சந்திக்க விரும்புவதாக அப்பாயின்மெண்ட் கேட்டார் டாக்டர் மைத்ரேயன். ஒரு வாரம் கழித்து நேரம் ஒதுக்கப்பட்டது. அப்பாயின்ட்மெண்ட் குறிப்புகளில் பன்னீர் செல்வத்தின் பெயரைக் குறிப்பிட வேண்டாம் என மைத்ரேயன் கேட்டுக் கொண்டார். அந்தக் குறிப்புகள் பணியாளர்களுக்கு அனுப்பப்படும். 2:30 மணி சந்திப்பின் போது தன் பெயர் மட்டுமே வெளியிடப்பட வேண்டும் என்று அவர் விரும்பினார். சந்திப்பை யார் படம் எடுப்பார்கள், படம் அமைச்சரின் சமூக ஊடகங்களில் வருமா எனவும் கேட்டுத் தெரிந்து கொண்டார்

Image result for OPS
ஆனால் சந்திப்பிற்கு சில மணி நேரங்களுக்கு முன் பன்னீர் செல்வமும் மைத்ரேயனும் தொலைக்காட்சிகளுக்குப் பேட்டி அளித்த போது நிர்மலாவை சந்திக்கப் போகும் தகவலை அறிவித்தனர்.


தன்னிடம் ரகசியமாக இருக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டவர்கள் ஊடகங்களிடம் ஏன் பகிரங்கப்படுத்தினார்கள்,(இதற்குப் பின் உள் நோக்கம் இருக்குமோ? எனக் குழம்பிப் போன நிர்மலா யாரையும் சந்திக்கப் போவதில்லை எனத் தீர்மானித்தார்
ஏன் "ரகசியத்தை" ஊடகங்கள் முன் உடைத்தார் பன்னீர் செல்வம்? 
அரசியல் காரணங்க்களுக்காக (உட்கட்சி விவகாரங்க்களுக்காக?) சந்திப்பு நிகழ்கிறது என்ற ஊகங்களைத் தகர்ப்பதற்காக முதல்வர் பழனிசாமி சென்னையில் செய்தியாளர்களிடம் சந்திப்பின் நோக்கத்தை வெளிப்படுத்தினார். உடனே (அதை நம்பாமல்?) கட்சியில் பன்னீர் செல்வத்திற்கு எதிரான கோஷ்டிகள் அமைச்சரிடம் தங்களுக்கும் நேரம் ஒதுக்குமாறு கேட்டார்கள்