அமேசான் ஊழியர்கள் வேலைநிறுத்தம்; இணையதளம் முடக்கம்; விற்பனை சரிவு!

Share:
ஊழியர்கள் வேலைநிறுத்தம் காரணமாக, அமேசான் இணையதள விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டது. 

ஆன்லைன் வர்த்தகத்தில் பொருட்களை விற்கும் பிரபல நிறுவனமாக அமேசான் விளங்குகிறது. இது பொதுமக்களுக்கு குறைந்த விலையில் பொருட்களை விற்பனை செய்யும் ‘அமேசான் பிரைம் டே’வை அறிமுகம் செய்தது. நேற்று முன் தினம் தொடங்கி, 36 மணி நேர சிறப்பு விற்பனை நடைபெற்றது. 

இந்த சூழலில் அமேசானில் பணிபுரியும் ஊழியர்கள் திடீர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். ஆரோக்கியமான பணியிடம், ஊதிய உயர்வு, மருத்துவ உதவி போன்ற கோரிக்கைகளை முன்வைத்தனர். ஸ்பெயினில் மட்டும் சுமார் 1,800 ஊழியர்கள் போராட்டத்தில் பங்கேற்றனர். 

இதனால் விற்பனை தொடங்கியதும், இணையதளம் முடங்கியது. இதன் காரணமாக ’அமேசான் பிரைம் டே’ விற்பனை தோல்வியில் முடிந்ததாக கூறப்படுகிறது. இதனை அமேசான் நிறுவனம் மறுத்துள்ளது.

எங்கள் தரப்பில் ஆரோக்கியமான பணியிடம் அளித்து வருகிறோம். ஊழியர்களின் பிரச்சனைகள் உடனுக்குடன் தீர்க்கப்பட்டு வருகிறது. எங்கள் ஊழியர்களில் சிலரே போராட்டத்தில் ஈடுபட்டனர். எனவே ‘அமேசான் பிரைம் டே’ வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளதாக கூறியுள்ளது.