கூகுளை ஆளும் தமிழன் ’சுந்தர் பிச்சை’ கதாபாத்திரத்தில் விஜய்; கசிந்தது ’சர்கார்’ படக்கதை?

Share:
சுந்தர் பிச்சைகதாபாத்திரத்தில் விஜய் நடிக்க இருப்பதாக தகவல்கள் கசியத் தொடங்கியுள்ளன. உலகளாவிய தமிழர்களை மையமாகக் கொண்ட கதையில் நடிக்க விஜய் தீவிர ஆர்வம் கொண்டிருந்தார். அதற்கான வாய்ப்பு இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்மூலம் நிறைவேறப் போகிறது. இவர்களின் கூட்டணியில் உருவாகி வரும் புதிய திரைப்படம் ‘சர்கார்’. 

இதன் கதையின் ஒருபகுதி அமெரிக்காவில் நடைபெறுவதாக அமைந்துள்ளது. இதனை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மூலம் அறியலாம். இந்நிலையில் கூகுளை ஆளும் தமிழன் சுந்தர் பிச்சையின் கதாபாத்திரத்தில் விஜய் நடிக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

சுந்தர் பிச்சை சென்னையில் பிறந்து, கல்வி கற்று, உலகின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனமான கூகுளின் தலைமைப் பொறுப்பு வகிக்கும் அளவிற்கு உயர்ந்துள்ளார். கூகுள் நிறுவனப் பங்குகளின் உயர்வால், இவரது சம்பளம் ரூ.2,500 கோடியாக அதிகரித்துள்ளது.