ஹெல்மெட்-ஐகோர்ட் உத்தரவு

Share:
டூவீலரில் செல்பவர்கள் ஹெல்மெட் அணிவதை உறுதி செய்ய ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. மேலும், காரில் செல்பவர்கள் சீட் பெல்ட் அணிவது மற்றும் வாகனங்களில் முகப்பு விளக்குகளில் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டுவதை உறுதி செய்து, இது குறித்து அறிக்கை அளிக்க போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளது.

மேலும், முதலில் போலீசார் ஹெல்மெட் மற்றும் சீட் பெல்ட் அணிய வேண்டும். அதிவேகத்தில் காரில் சென்ற கேரளா முன்னாள் கவர்னர் மற்றும் தற்போதைய நீதிபதிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலும் இதுபோன்ற சட்டங்கள் உள்ளன. இதனை அமல்படுத்த வேண்டும் எனவும் நீதிபதிகள் கூறினர்.