வாகன இன்சூரன்ஸ் பணத்தை பெற வாட்ஸ் அப் ஆதாரம் போதும்; பிரிமியத்தையும் வாட்ஸ் அப் மூலமே செலுத்தலாம்

Share:
உங்கள் வாகனம் விபத்தில் சிக்கினால் இன்சூரன்ஸ் பணத்தை கோர வாட்ஸ்அப் மூலம் வீடியோவை ஆதாரமாக அனுப்பினால் போதும் எனவும், பிரிமியம், மற்றும் இன்சூரன்ஸ் புதுப்பித்தலுக்கான பணத்தையும் வாட்ஸ் அப் மூலமே அனுப்பலாம் எனவும் ஒரு இன்சூரன்ஸ் நிறுவனம் தெிரவித்துள்ளது. இது குறித்த முழு தகவலை இந்த செய்தியில் காணுங்கள்
உங்கள் வாகனம் விபத்தில் சிக்கினால் நீங்கள் அடுத்தாக சந்திப்பது இன்சூரன்ஸ் நிறுவனமாக தான் இருக்கும். இந்த நிறுவனங்கள் பல்வேறு கட்டுப்பாடுகளை வைத்துள்ளது.பலர் தங்கள் வாகனம் விபத்தில் சிக்கியிருந்தாலும் அது விபத்தில் சிக்கியதற்கான போதுமான ஆதாரம் இருந்திருக்காது. அதனாலேயே பலர் இன்சூரன்ஸ் பணத்தை வாங்கமலேயே போயுள்ளனர். இது விபத்தில் சிக்குபவர்களுக்கு பெரும் தலைவலியாகவே இருந்து வந்துள்ளது.
அப்படியே ஆதாரம் இருந்தாலும், இன்சூரன்ஸ் பணத்தை கோருவது, ஆதாரங்களை சமர்பிப்பது என்பது போன்ற சமாச்சாரங்களும் மிக கடினமாக இருக்கும். இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு சென்று அதற்கான கொடுக்கப்பட்ட விண்ணப்பதை நிரப்பி பல நடைமுறைகள் கடைபிடிக்கப்படுகிறது.

இந்நிலையில் ப்யூச்சர் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனம் வாட்ஸ்அப் செயலியை இன்சூரன்ஸ் கோரவும், ஆதாரங்களை சமர்பிக்கவும் பயன்படுத்த முடிவு செய்துள்ளது.

இது குறித்து அந்நிறுவன தலைமை செயல் அதிகாரி கிருஷ்ணமூர்த்தி ராவ் கூறுகையில் :"இன்று இந்தியாவில் பெரும்பாலும் வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்தி வருகின்றனர். அதனால் நாங்களும் எங்கள் சேவையை வாட்ஸ் அப் வழியாகவே வழங்க விரும்புகிறோம்.

தற்போது ஒருவர் எங்கள் கம்பெனியில் பாலிசி எடுக்கிறார்கள் என்றால் அவர்களுக்கு தற்போது பாலிசியை பேப்பரிலும், இ-மெயிலிலும் வழங்குகிறோம். இனி அவர்களுக்கு அதை வாட்ஸ் அப் வழியாகவும் வழங்குவோம்.

மேலும் அவர்கள் விபத்தில் சிக்கினால் எங்கள் நிறுவனத்தின் பிரதிநிதிகளை தொடர்பு கொள்ள வேண்டும் அவர்கள் விபத்து நடந்த விதத்தை கேட்டறிந்து எவ்வாறு விபத்திற்குள்ளான வாகனத்தை வீடியோ எடுக்க வேண்டும் என அறிவுறுத்துவார்கள்.

அதன் படி வீடியோக்களை வாடிக்கையாளர்களே எடுத்து வாட்ஸ்அப் வழியாக எங்கள் நிறுவனத்திற்கு அனுப்பி இன்சூரன்ஸ் தொகையை கோரலாம்.
இந்த சேவையை அந்நிறுவனம் கடந்த ஜூன் 15ம் தேதியே துவங்கி விட்டது தற்போது அந்நிறுவனத்தில் நிலுவையில் உள்ள சுமார் 5200 வாடிக்கையாளர்களுக்கு வாட்ஸ் அப் மூலம் அவர்களுக்கான பாலிசி சான்றிதழை அனுப்பியுள்ளது.

ஏற்கனவே இது போன்ற சேவையை புக்மை ஷோ, நிறுவனம் புக் செய்யப்படும் டிக்கெட்களை அனுப்பவும், ஐசிஐசிஐ வங்கி தங்கள் வாடிக்கையாளர்களுக்கு தகவல் அனுப்பி தொடர்பு கொள்ளவும் இந்த வாட்ஸ் அப் செயலியை பயன்படுத்துகிறது. தற்போது இது இன்சூரன்ஸ் துறையிலும் வந்துள்ளது.
தற்போது வாட்ஸ் அப் நிறுவனம் யூபிஐ வசதியையும் வாட்ஸ் ஆப்பில் அறிமுகப்படுத்தியது. தன் மூலம் வாடிக்கையாளர்கள் தங்கள் வங்கி கணக்கில் இருந்து வாட்ஸ்அப் மூலமாக இன்சூரன்ஸ் பிரிமியத்தை செலுத்தும் வசதியையும் அறிமுகப்படுத்தியுள்ளோம். தற்போது அது சோதனை முயற்சியாக மட்டுமே மேற்கொள்ளப்பட்டுள்ளது விரைவில் அதை அதிகாரபூர்வ சேவையாக அறிவிப்போம். " என கூறினார்