போலீசார் கண்காணிப்பில் நடிகர் விஜய் சேதுபதி?

Share:
சமூகத்தின் மீது, தீவிர பற்றுதல் உடையவர்களாக காட்டிக் கொள்வதில், அரசியவாதிகளை விட, கூடுதல் ஆர்வத்துடன் இருக்கிறார்கள் சினிமாக்காரர்கள்.

சமூகம் சார்ந்த பிரச்னைகளை, முதல் ஆளாக கையில் எடுக்கிறார்கள் தற்போதைய சினிமாக்காரர்கள். இது போன்ற பிரச்னைகளுக்கு கைகொடுப்பவராக தன்னை காட்டிக் கொள்கிறார் நடிகர் விஜய் சேதுபதி. பல்வேறு பிரச்னைகளுக்கு ஆதரவாக குரல் எழுப்பத் துவங்கி இருக்கிறார்.
இதனால், அவரைத் தேடிச் சென்று பல்வேறு குழுக்களைச் சேர்ந்தவர்கள் புகழ்கின்றனர். அவர் அளிக்கும் அன்பளிப்பையும் வாங்கிக் கொண்டு செல்கின்றனர்.
அவரை சந்திப்பவர்களில் சில, அரசுக்கு எதிராக செயல்படும் குழுக்களும் இருப்பதாக, உளவுத் துறை போலீசார் கண்டறிந்துள்ளனர். இதையடுத்து, நடிகர் விஜய் சேதுபதியின் மொத்த அசைவுகளையும் கண்காணிக்கத் துவங்கி உள்ளனர்.
விஜய் சேதுபதி பதில்:

பத்திரிகையாளர்கள் சிலர், விஜய் சேதுபதியிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது:

சமூகத்தின் மீது அக்கறை கொண்டவன் நான். அதனால், சமூகத்துக்கு எதிராக நடக்கும் பிரச்னைகள் குறித்து, கருத்து சொல்கிறேன். என் கருத்துக்களின் பால் ஈர்க்கப்பட்டவர்கள், என் கருத்துக்களுக்காக நன்றி சொல்கிறார்கள். மக்கள் பிரச்னைகளுக்காக போராடும் அவர்களுக்கு, என்னால் முடிந்த பண உதவிகளை செய்கிறேன். அவர்கள், சார்ந்துள்ள குழு எப்படிப்பட்டது? தீவிரவாதத்தின் மீது நம்பிக்கை உடையவர்களா? என்பது குறித்தெல்லாம் எனக்குத் தெரியாது. அது தேவையும் இல்லை.இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.இருந்தபோதும், நடிகர் விஜய் சேதுபதி நடவடிக்கைகளை போலீசார் கண்காணிக்கின்றனர்.