அதிகமாக வரி செலுத்தும் ஒரே நபர் தோனி தான்! எவ்வளவு ரூபாய் தெரியுமா

Share:
பிகார், ஜார்கண்ட்டில் அதிகமாக வரி செலுத்தும் நபர் என்ற பெயரை கிரிக்கெட் வீரர் தோனி பெற்றுள்ளார். 


இந்திய கிரிக்கெட் வீரர் தோனி தற்போது பிசிசிஐ-யின் ஏ பிரிவில் ஆட்டக்காரராக உள்ளார். பிசிசிஐ கிரிக்கெட் மட்டுமில்லாது, விளம்பரங்கள் மூலமாகவும் இவருக்கு வருமானம் வருகிறது. 
ms dhoni pays rs 12.17 crore in taxes, highest in bihar and jharkhand
இந்நிலையில், பிகார், ஜார்கண்ட்டில் அதிகமான வருமான வரி செலுத்தும் முதல் நபர் என்ற பெருமையை கிரிக்கெட் வீரர் தோனி பெற்றுள்ளார். இது குறித்து ராஞ்சியில் உள்ள மூத்த வருமானவரித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், பிகார், ஜார்கண்ட்டில் 2017-18ம் நிதியாண்டின் படி, தோனி 12 கோடி ரூபாய் வருமானவரி செலுத்தியுள்ளதாகவும், இந்த மாநிலங்களில் இவ்வளவு வரி யாரும் செலுத்தியதில்லை என்றும் தெரிவித்தார். கிரிக்கெட்டில் மட்டும் இல்லாமல் வர்த்தக்துறையிலும் தற்போது தோனி கவனம் செலுத்தி வருகிறார். முன்பை விட தற்போது அவருக்கு விளம்பர வாய்ப்புகள் குவிந்து வந்தாலும், அவைகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட விளம்பரங்களை மட்டுமே ஒப்புக்கொள்கிறார் என்றும் கிரிக்கெட் வட்டாரங்கள் கூறுகிறது.