இன்னமும் மனித நேயம் மிச்சம் இருக்கிறது..! கன மழையால், கர்ப்பிணி பெண்ணை கட்டிலில் தூக்கி சென்று பிரசவம்.. !!

Share:
கடந்த 2 மாதங்களாக பருவ மழையின் காரணமாக இந்திய முழுவதும் ஆங்காங்கே கன மழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக வட மாநிலங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. 

மத்தியபிரதேச மாநிலத்தில் கடந்த சில நாட்களாககன மழை பெய்து வருகிறது. அங்கு தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக அம்மாநிலத்தின் பல பகுதிகள் வெள்ளம் போல் காட்சியளிக்கிறது. இந்நிலையில், திகாம்கார்ஹ் பகுதியில் கர்ப்பிணி பெண் ஒருவருக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. அந்த பெண் வசிக்கும் தெரு முழுவதும் வெள்ளம் சூழ்ந்ததால் அவரால் மருத்துவமனைக்கு செல்ல முடியவில்லை. இதையடுத்து அந்த பகுதியில் உள்ள மக்கள், கர்ப்பிணி பெண்ணை காட்டில் தூக்கி சென்று மருத்துவமனையில் சேர்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.   
இது பற்றி ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், திகாம்கார்ஹ் பகுதியில் வசிக்கும் கர்ப்பிணி பெண்ணிற்கு கடுமையான பிரசவ வலி ஏற்பட்டு உள்ளது. இதையடுத்து பெண்ணின் உறவினர்கள் அவசர ஊர்தியான 108 யை அழைத்துள்ளனர். ஆனால், அந்த பெண் வசிக்கும் தெரு முழுவதும் மழை நீர் சூழ்ந்துள்ளதால், என்னால் வர முடியாது என்று அவசர ஊர்தி ஓட்டுநர் கூறிவிட்டார். இதனையடுத்து கர்ப்பிணி பெண்ணின் உறவினர்கள் அந்த பெண்ணை கட்டிலில் தூக்கி கொண்டு மருத்துவமனைக்கு சென்று பிரசவம் பார்த்துள்ளனர்.