யூட்யூப் பார்த்து அதிமேதாவிதனமான செயலால் அநியாயமாய் துடிதுடித்து உயிரிழந்த அப்பாவி கர்ப்பிணி பெண் .!

Share:
அதிமேதாவித்தனமாக யூட்யூப் வீடியோ பார்த்து கர்ப்பிணிப் பெண்ணுக்கு பிரசவம் பார்த்ததில் அவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் நல்லூர் புதுப்பாளையத்தை சேர்ந்தவர் கார்த்திக். இவரது கிருத்திகா தம்பதியினர்.மேலும் கார்த்திக் தனியார் கம்பெனியிலும், கிருத்திகா தனியார் பள்ளியிலும் ஆசிரியையாகவும் வேலை பார்த்து வந்தனர்.
இந்நிலையில் கிருத்திகா கர்ப்பமடைந்தார்.அதனால் கார்த்திக் மற்றும் கிருத்திகா குடும்பமே தங்களது குடும்பத்திற்கு ஒரு குட்டி வாரிசு வரப்போகிறது என மகிழ்ச்சியில் திளைத்திருந்தனர்.

அப்பொழுது அவர்களை பார்க்க வந்த கார்த்திக்கின் நண்பர் பிரவீன் கார்த்திக்கிடம் உன் மனைவி கர்ப்பமாக உள்ளார் என எல்லோரையும் போல நீயும் உன் மனைவியை செக்கப்பிற்காக மருத்துவமனை அழைத்துச் செல்லாதே.அவர்கள் பணம் பிடுங்க கண்ட கண்ட மாத்திரைகளை கொடுத்து பில் போட்டு கொடுப்பார்கள்

காலம் எவ்வளவோ மாறி விட்டது. அந்த காலத்தில் எல்லாம் பிரசவ காலத்தில் மருந்து மாத்திரைகள் சாப்பிட்டார்களா? அல்லது மருத்துவமனை தான் சென்றார்களா? எல்லாமே சுயப்பிரசவம்தான் .

மேலும் இப்பொழுதெல்லாம் யூட்யூபில் எல்லாமே தெளிவாக உள்ளது . ஆகவே யூட்யூபை பார்த்து நாமே கிருத்திகாவிற்கு பிரசவம் பார்க்கலாம் என்று கூறி பிரவீன் கார்த்திக்கின் மனதை மாற்றியுள்ளார் .


கார்த்திக்கும் நடந்தவற்றை மனைவியிடம் கூறியுள்ளார், முதலில் இதற்கு மறுப்பு தெரிவித்த கிருத்திகா பின் சரி என்று கூறியிருக்கிறார். இருவரது குடும்பத்தினரும் எவ்வளவோ கூறியும் அவர்கள் கேட்கவில்லை.
இந்நிலையில் நேற்று கிருத்திகா பிரசவ வலியால் துடித்திருக்கிறார். கார்த்திக் பதறிப் போய் நண்பன் பிரவீனை அழைத்துள்ளார். எமனாய் வந்த பிரவீன் யூட்யூபில் பிரசவம் செய்யும் வீடியோவை பார்த்தபடி கிருத்திகாவிற்கு பிரசவம் செய்துள்ளார்.அப்பொழுது குழந்தையை கொடூரமாக வெளியே இழுத்ததில் கிருத்திகா துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் குழந்தை படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறது.



கிருத்திகாவின் உடலைப் பார்த்து அவரது கணவரும் உறவினர்களும் கதறி அழுதனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.