இணையதள சேவைக்காக செயற்கைக்கோளை நிறுவுகிறது பேஸ்புக்

Share:
இணையதள வசதி இல்லாததன் காரணமாக, பேஸ்புக் வசதியை பெறாதவர்கள், விரைவில் பேஸ்புக் வசதியை பெறும் பொருட்டு, 2019ம் ஆண்டில், பேஸ்புக், சொந்தமாக செயற்கைக்கோளை நிறுவ உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகில், இணையதள வசதி இல்லாத பகுதியே இருக்கக்கூடாது என்பதில் பல்வேறு முன்னணி நிறுவனங்கள் துரித நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன. இதற்கு செயற்கைக்கோள் மூலம் தான் தீர்வு என்பதில் அந்நிறுவனங்கள் தெளிவாக உள்ளன. வருங்காலங்களில், பிராட்பேண்ட் சேவையை, உலகின் எவ்விடத்திலும் தங்குதடையின்றி பெற செயற்கைக்கோள் தொழில்நுட்பமே பேருதவி புரியும் என்பதை அவர்கள் புரிந்து வைத்துள்ளனர்.
பேஸ்புக், இன்டர்நெட், செயற்கைக்கோள்
கூட்டு முயற்சி : உலகிலுள்ள அனைவருக்கும் இணையதளசேவை என்பதனடிப்படையில், சொந்தமாக செயற்கைக்கோளை நிறுவும் திட்டத்தில் பேஸ்புக் நிறுவனம் தனித்து இயங்காமல், உலகின் முன்னணி நிறுவனங்களான இலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் ஒன்வெப் நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட உள்ளது.டூரோன் மூலம் இன்டர்நெட் : பேஸ்புக் நிறுவனம், இணையதள வசதி இல்லாத பகுதிகளில் உள்ளவர்களின் வசதிக்காக, டூரோன் மூலம் இணைதள வசதியை அளிப்பதாக கடந்த ஜூன் மாதம் அறிவித்திருந்தது. இதன்மூலம், கிட்டத்தட்ட 4 பில்லியன் மக்கள் இணையதள வசதியை பெறுவர் என்று அந்நிறுவனம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.