தமிழ்நாட்டில் விரைவில் தேர்தல்..! வாக்குப்பதிவு எந்திரங்கள் வந்தடைந்தது..!

Share:
பாஜக தலைமையிலான மோடி அரசு பதிவியேற்று நான்கு ஆண்டுகள் முடிவடைந்தது. அடுத்த ஆண்டோடு தற்போது உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களின் பதிவிக்காலம் முடிவடைவதால் ,பாராளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. இதற்காக, அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் பாராளுமன்ற தேர்தலுக்காக காஞ்சீபுரம் மாவட்டத்தில் 10,170 வாக்குப்பதிவு எந்திரங்கள் ஒதுக்கப்பட்டன.

இதைத்தொடர்ந்து, கடந்த 16-ந் தேதி 4650 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் காஞ்சீபுரத்திற்கு வந்தது. தற்போது மீண்டும் பெங்களூரில் இருந்து 2 கண்டெய்னர் லாரிகள் மூலம் 5520 புதிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு வரப்பட்டன. இந்த வாக்கு பதிவு எந்திரங்கள் காஞ்சீபுரம் அரசு கிடங்கில் பாதுகாப்பாக வைக்கப்பட்டது.

இந்நிலையில், பெங்களூரில் இருந்து வந்த புதிய வாக்கு பதிவு எந்திரங்களை மாவட்ட கலெக்டர் பொன்னையா ஆய்வு செய்தார்.