ஜெயலலிதா இருந்திருக்கனும்: நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து

Share:
ஜெயலலிதா மட்டும் இந்த நேரத்தில் உயிருடன் இருந்திருந்தால், மக்களவையில் நடந்திருப்பதே வேறு என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.

ஜெயலலிதா மட்டும் இந்த நேரத்தில் உயிருடன் இருந்திருந்தால், மக்களவையில் நடந்திருப்பதே வேறு என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார். 

ஆளும் பாஜக அரசு மீது எதிர்கட்சிகள் கொண்டுவந்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்த விவதாம நடைபெற்று வருகிறது. இதில் பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பாஜக அரசு மீது சாரமாரி கேள்விகளை முன்வைத்தார். நான் பிரதமரில்லை, பிரதம சேவகன் என்று கூறி அரியணை ஏறிய மோடி, நாட்டு மக்களுக்காக உழைக்கவில்லை, நாட்டிலுள்ள குறிப்பிட்ட சில தொழிலதிபர்களுக்காக உழைக்கிறார் என்று ராகுல் காந்தி பேசினார். 

தொடர்ந்து பாஜக தலைவர் அமித் ஷாவையும் கடுமையாக விமர்சித்து பேசிய ராகுல் காந்தி, இறுதியாக நான் நன்றாக பேசுவதாக பாஜக உறுப்பினர்கள் சற்றுமுன் தன்னிடம் கூறியதாக தெரிவித்தார். மக்களவையின் தனது உரையை நிறுத்திய உடன் பிரதமர் மோடி இருக்கைக்கு சென்று ராகுல் காந்தி கட்டி அணைத்தார். இதை சற்றும் எதிர்பாராத மோடி, ராகுலை தொடாமல் இருந்தார். 


பிறகு ராகுல் விலகிச்சென்ற உடன், அவரை தோளை தட்டி அழைத்து கை கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். தொடர்ந்து மீண்டும் ஒருமுறை ராகுல் காந்தி பிரதமர் மோடியை கட்டியணைத்து பிறகு அவரது இடத்திற்கு சென்றார்.


இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில், இது தொடர்பாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜூ கூறுகையில், இந்த நேரம் ஜெயலலிதா மட்டும் உயிருடன் இருந்திருந்தால், நம்பிக்கையில்லா தீர்மானத்தின் போது, மத்திய பாஜக அரசுக்கு எதிராக அதிமுக எம்பிக்கள் வாக்களித்திருப்பார்கள். பாஜக அரசு கொண்டு வந்த சட்டங்களை எல்லாம், அப்போது எதிர்த்தவர் ஜெயலலிதா மட்டுமே. ஆனால், தற்போது தமிழகத்தில் அடுத்த தேர்தல் வந்தால், அதிமுக தோல்வியை சந்திக்கும் என்று குறிப்பிட்டார். 

தொடர்ந்து பேசிய அவர் கூறுகையில், ஒருமித்த கருத்துக்கள் கொண்ட கட்சிகளை ஒருங்கிணைத்து கூட்டாட்சி முன்னணி என்ற புதிய அணியை தொடங்கப்பட இருப்பதாகவும், அதன் மூலம், பாஜகவை ஆட்சியில் இருந்து அகற்ற இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அடுத்த ஆண்டு ஜனவரி 19ம் தேதி நடக்கயிருக்கும் பிரமாண்ட பேரணியில் கட்சிகளின் தலைவர்கள் அழைக்கப்படுவார்கள் என்றும் அவர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.