பாதி விலையில் அமேசான் - என்னென்ன பயன் தெரியுமா?

Share:
அமேசான் பிரைமில் வரும் ஜூலை 16-17ம் தேதிகளில் இணைந்தால், சாதாரண நாட்களில் செலுத்த வேண்டிய கட்டணத்தை விட 50% குறைவாக செலுத்தினால் போதும் என்ற அறிவிப்பை அமேசான் நிறுவனம் அறிவித்துள்ளது. 

பெரும்பாலான ஆன்லைன் விற்பனை நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு பல்வேறு சலுகைகளை வழங்கு வருகின்றன. அந்த வகையில் அமேசான் நிறுவனம் ‘அமேசான் பிரைமில்’ பாதி விலையில் கொடுக்கும் சலுகையை அறிவித்துள்ளது. 

சாதாரணமாக அமேசான் பிரைம் சேவைகளை அனுபவிக்க வாடிக்கையாளர்கள் மாதம் ரூ. 129 அல்லது ஒரு வருட சந்தா ரூ. 999 செலுத்த வேண்டும். ஆனால் அமேசான் அறிவித்துள்ள சலுகையில் ஜூலை 16 - 17ம் தேதிகளில் அமேசான் பிரைம் ஆண்டு உறுப்பினரானால் பாதில் விலையில் அதாவது ரூ. 499 மட்டும் செலுத்தினால் போதும் என்ற சலுகையை அறிவித்துள்ளது. 

இந்தியர்களை சேர்க்கும் யுக்தி
இந்தியாவில் ஒவ்வொருவரும் வரவு எவ்வளவு, செலவு எவ்வளவு என கணக்கு பார்த்து குடும்பம் நடத்தி வருகின்றனர். அதனால் அமேசான் பிரைமில் இணைவது குறைவாக உள்ளது. 


மக்கள் தொகை அதிகம் உள்ள இந்தியாவை தன் பக்கம் இழுக்கும் வகையில், அமேசான் பிரைமில் சேர்க்கும் வகையில் பாதி விலையில் உறுப்பினர் ஆகலாம் என்ற அறிவிப்பின் மூலம் முயற்சியில் இறங்கி உள்ளது அமேசான். 

என்ன வசதி : 
அமேசான் பிரைம் உறுப்பினரானால் அமேசானில் வெளியிடப்படும் புதிய படங்களை கண்டுகளிக்கலாம். மேலும் அமேசானில் அறிமுகப்படுத்தப்படும் பொருட்களுக்கு உறுப்பினர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். 

தற்போது அமேசான் பொருட்கள் விற்பனையில் 35 புது பொருட்களை இணைத்து ஒப்பந்தம் போட்டுள்ளது.