வங்கியை எப்படி ஏமாற்றுவது?

Share:
ஏடிஎம் கொள்ளையர்களை உருவாக்கும் இளைஞன் :பீகாரை சேர்ந்த பங்கஜ் சஹானி என்ற 26 வயது இயற்பியல் படித்த பட்டதாரி தன் வேலையாக ஏடிஎம் இல் எப்படி கொள்ளை அடிப்பது, ஏமாற்றி பணம் பறிப்பது என்பதை வேலையில்லாத மற்ற பட்டதாரிகளுக்கு கற்று கொடுத்து வருவதாக போலீஸார் திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளனர். 

a fraudster runs training school for atm cheats in bihar, here's how he stole rs 1.04 croreபீகார் போலீஸார் கைது செய்துள்ள 26 வயது இளைஞன் ஏடிஎம் மூலம் பணத்தை ஏமாற்றி ரூ 1.04 கோடி கொள்ளை அடித்ததாக கூறி அதிர்ச்சியை அளித்துள்ளனர். 
போலீஸார் கூறும் போது, “பங்கஜ் சஹானி 2010, 2012ம் ஆண்டுக்குள் ரூ. 1.04 கோடியை ஏடிஎம் மூலம் கொள்ளை, போலி ஏடிஎம் கார்டு மூலம் திருடியுள்ளது தெரியவந்துள்ளது. 

மேலும் இவர் கிழக்கி இந்திய மாநிலங்களான பீகார், ஜார்கண்ட், மேற்கு வங்கம், உத்தர பிரதேசம் மற்றும் நேபாளத்தில் கூட இவர் ஏடிஎம் கொள்ளை கைவரிசையில் ஈடுபட்டுள்ளார்.