நீங்களே ஒரு ஆதார் டேட்டா பேஸ் உருவாக்கலாம்!

Share:
யார் வேண்டுமானாலும் பலரது ஆதார்தகவல்களை சேகரித்து ஒரு ஆதார் டேட்டா பேஸ் உருவாக்க முடியும் என்று தெரியவந்துள்ளது. 

ஆதார் தகவல்கள் பாதுகாப்பானதா இல்லையா என்ற விவாதம் ஆதார் ஆணையத்துடன் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஆதார் தகவல்கள் பாதுகாப்பு குறித்து கேள்வி எழுப்படும் போதெல்லாம், அதனை ஆதார் ஆணையம் உடனே மறுத்தும் வருகிறது. 

Image result for aadharஇந்நிலையில், பத்திரப் பதிவு செய்தவர்களின் ஆதார் உள்ளிட்ட பல தகவல்களை யார் வேண்டுமானாலும் வாங்கும் வசதியை ஆந்திரப் பிரதேசம் உள்ளிட்ட சில மாநிலங்கள் வழங்குகின்றன. 
உதாரணமாக, ஆந்திர மாநில இணையதளத்தின் மூலம் ஒரு பத்திரப்பதிவு ஆவணத் தொகுப்பின் நகலையும் ரூ. 210 முதல் 235 கட்டணத்தில் வாங்கலாம். ஒரு தொகுப்பில் ஒன்று அல்லது இரண்டு பத்திரப்பதிவு விவரங்கள் (பெயர், முகவரி, ஆதார், கைரேகை) இருக்கும். ஒரு பத்திரப் பதிவில் வாங்குபவர், விற்பவர், சாட்சி என மூன்று பேரின் விவரங்கள் இருக்கும். அதாவது, ஒரு நபரின் ஆதார் தகவலை ரூ50-60 செலவில் ‘முறைப்படி’ வாங்கிவிடலாம்.