ஏழுமலையான் கோயிலை 9 நாள் மூடும் முடிவை கைவிட்ட தேவஸ்தானம்!

Share:
திருப்பதி மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ஏழுமலையான் கோவிலை 9 நாட்கள் மூடும் முடிவை தேவஸ்தானம் கைவிட்டுள்ளது. 

ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதிஏழுமலையான் கோயிலில் ஆகஸ்டு மாதம் 11 ஆம் தேதி முதல், 16 ஆம் தேதிவரை மகா கும்பாபிஷேகம் நடக்க உள்ளது. இதற்காக பலாலயம் ஏற்படுத்துதல், வைதிக காரியம் செய்தல், செப்பனிடும் பணிகள் செய்வதற்காக ஆகஸ்டு 9 ஆம் தேதி காலை 6.00 மணி முதல் ஆகஸ்டு17 ஆம் தேதி காலை 6.00 மணிவரைபக்தர்கள் தரிசனத்தை ரத்து செய்தது தேவஸ்தானம். 

தேவஸ்தானமத்தின் இந்த முடிவுக்கு சமூகவலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்தன. மேலும் எம் .எல் .ஏ ரோஜா தேவஸ்தானத்தின் முடிவு சந்தேகத்தை ஏற்படுத்துவதாக கேள்வி எழுப்பினார்.இதனைத்தொடர்ந்து ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு விசாரணை நடத்தினார். 

இந்நிலையில் இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த தேவஸ்தான செயல் அதிகாரி கூறியதாவது: மகா கும்பாபிஷேகத்தைமுன்னிட்டு 9 நாட்கள் திருப்பதி கோவில் மூடப்படும் முடிவை கைவிட்டுள்ளோம்.இதுகுறித்துஜூலை23 ஆம் தேதிபக்தர்களிடம் கருத்து கேட்பு நடத்தி, ஆலோசனைகேட்டு அதன்படி இறுதிமுடிவு எடுக்கப்படும். இதன் அடிப்படையில் 24 ஆம் தேதி அவசர அறங்காவலர் கூட்டம் நடக்க உள்ளது. இதற்கு பிறகு பக்தர்கள் தரிசனம் குறித்து தகவல் விவரங்கள் தெரிவிக்கப்படும்.அப்படி பக்கதர்கள்தரிசனத்திற்குஅனுமதிக்கப்பட்டாலும்,தினசரி 15,000 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவர். இவ்வாறு அவர்கூறினார்.