ஒரு சிக்சர் கூட அடிக்கல..: 7 ஆண்டுகளில் இந்தியாவின் மோசமான சாதனை

Share:
7 ஆண்டுகளுக்கு பின் ஒருநாள் போட்டி ஒன்றில் ஒரு சிக்சர் கூட அடிக்கவில்லை என்ற மோசமான சாதனையைப் படைத்துள்ளது இந்திய கிரிக்கெட் அணி.

இந்திய அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இதில் டி20 தொடரை இந்திய அணிக் கைப்பற்றியது. இதனையடுத்து ஒரு நாள் போட்டிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இதில் இந்திய அணி முதல் போட்டியையும், இங்கிலாந்து அணி 2வது போட்டியையும் வென்றன. இந்திய அணி இரண்டாவது போட்டியை 86 ரன்கள் வித்தியாசத்தில் இழந்தது.

அந்த போட்டியில் இந்திய அணி ஓரு சிக்ஸர் கூட எடுக்கவில்லை. கடந்த 2011ம் ஆண்டு நடந்த உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி ஒரு சிக்‌ஸர் கூட அடிக்கவில்லை. அதற்கு பின் தற்போது தான் இந்திய அணிக்கு இந்த நிலை ஏற்பட்டுள்ளது. 7 ஆண்டுகளுக்கு பின் இந்திய கிரிக்கெட் அணியின் இந்த மோசமான சாதனை ரசிகர்களை வருத்தத்தில் அழ்த்தி உள்ளது.