வரும் வெள்ளியன்று நிகழவிருக்கும் சந்திர கிரகணமானது இந்த 3 முக்கிய ராசிக்காரகளுக்கு பாதிப்பை ஏற்படுத்துமாம்

Share:
வரும் வெள்ளியன்று நிகழவிருக்கும் சந்திர கிரகணமானது இந்த 3 முக்கிய ராசிக்காரகளுக்கு பாதிப்பை ஏற்படுத்துமாம். 

ஜூலை 27அதாவது வருகின்ற வெள்ளிக்கிழமை அன்று சந்திர கிரகணம் நிகழ உள்ளது. இம்முறை சந்திரன், பூமி மற்றும் சூரியன் எல்லாம் ஒரே கோட்டில் சந்திக்கவிருக்கிறது. பெரும்பாலான நேரங்களில் சந்திரன் சரியான நேர்கோட்டில் வராததால் முழுமையான சந்திர கிரகணம் நிகழாது. ஆனால் இந்த முறை சந்திர கிரகணமானது முழுமையான நேர் கோட்டில் நிகழ உள்ளது. 

இதுதொடர்பாக டெல்லி விண்வெளி ஆராய்ச்சி கழகத்தை சேர்ந்த அஜய் தால்வர் கூறியதாவது ‘ இம்முறை மழைக்காலம் என்பதால், சந்திர கிரகணத்தை பார்க்கும் போது, மேகங்கள் இடையூராக இருக்கலாம். மேலும் நம்மால் சந்திரனில் இருந்து பார்க்க முடிந்தால் பூமி சூரியனை மறைப்பதை பார்க்க முடியும். மேலும் இந்த ஆண்டு மட்டும் மூன்று முக்கிய நிகழ்வு நிகழ்கிறது மிக சிறப்பு. 

கடந்த 13ம் தேதி பகுதி சூரிய கிரகணம் நிகழ்ந்தது. வருகின்ற வெள்ளிகிழமை சந்திர கிரகணம் நிகழ்கிறது. மேலும் வருகின்ற 31ம் தேதி செய்வாய் கிரகம் பூமியை நெருங்கி வரும் நிகழ்வு நடக்கயிருக்கிறது என்று அவர் கூறினார். இந்தியாவில் வரும் 27ம் தேதி இரவு 11. 45 மணிக்கு சந்திர கிரகணம் தெரியும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
1 மணி நேரம் 45 நிமிடங்கள் வரை நீடிக்கும் நீளமான சந்திர கிரகணம்!

பொதுவாக சூரிய கிரகணமோ அல்லது சந்திர கிரகணமோ எதுவாக இருந்தாலும், அன்று கிரகணம் முடியும் வரை சாப்பிடாமல், முடிந்த பிறகு குளித்துவிட்டு பின்னர் உணவருந்தும் பழக்கம் எல்லோரிடமும் இருக்கிறது. இதற்கு ஆன்மீக ரீதியிலான காரணங்களும், அறிவியல் காரணங்களும் இருப்பதாக கூறப்படுகிறது. அப்படி பார்க்கும் போது அதற்கு சில பரிகாரங்களும் உண்டு. வரும் வெள்ளியன்று நிகழயிருக்கும் சந்திர கிரகணத்தின் போது இந்த ராசிக்காரர்களுக்கு மட்டும் அதிகளவில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. 

கும்பம்: 

பொதுவாக கலகலப்பான குணம் கொண்ட கும்ப ராசிக்காரர்கள் சந்திர கிரகணத்தின் போது யாரைப் பார்த்தாலும் சண்டை போடும் எண்ணத்திலேயே இருப்பார்களாம். அதனால் தன் மீதும் கூட கோபம் உண்டாகும். 

பரிகாரம்: மனதை கொஞ்சம் அமைதியாக வைப்பது தான். யாரிடமாவது சண்டை வருவது போன்று தோன்றினால், அங்கிருந்து நகர்ந்து செல்வது நல்லது. 


மகரம்

சந்திரனானது செவ்வாயை மிக வேகமாக பாதிக்கும். ஆனால், இந்த முறை மிக மந்தமாகவே பாதிக்கிறது. இந்த கிரகணத்தின் போது, செவ்வாயின் தாக்கம் உங்கள் மீது இருந்தாலும் பாதிப்பு எப்போதையும் விட கொஞ்சம் குறைவாகவே இருக்கும். 

பரிகாரம்: உங்களது கோபம், முன் யோசனை ஆகியவற்றை அன்று ஒரு நாள் மட்டும் ஒதுக்கி வைத்தால் இந்த கிரகணம் உங்களுக்கு வெற்றியைத் தேடி தரும். 


சிம்மம்

இந்த கிரகணத்தின் போது சூரியன் சிம்ம ராசியில் இருக்கிறது. இது உங்களது பிறந்தநாள் காலகட்டம். இந்த கிரகணத்தின் போது உலகமே உங்களது பின்னால் இருப்பது போன்றும், உங்களையே உற்று நோக்குவதாகவும் எண்ணிக் கொண்டிருப்பீர்கள். இந்த கிரகணத்தில் வெற்றியும் உங்களுக்குத் தான் உண்டாகப் போகிறது என்பதை மறந்துவிடாதீர்கள். இந்த மாதம் முழுவதும் உங்களுக்கு சாதகமாகத் தான் ஒவ்வொரு விஷயமும் நடக்கும் என்பதை நீங்களே அறிந்து கொள்வீர்கள்.