இனி ஒரு நாளைக்கு 25 மணி நேரமாம்!

Share:
'எனக்கு ஏராளமான வேலைகள் உள்ளன. ஒரு நாளைக்கு, 24 மணி நேரம், எனக்கு போதவில்லை...' என, பலர் கூறுவது உண்டு. இப்படிப்பட்டவர்களுக்கு ஒரு ஆறுதலான செய்தி.
ஒரு நாளைக்கு, 24 மணி நேரம் என்பது, விரைவில், 25 மணி நேரமாகப் போகிறதாம். 
அமெரிக்காவில் உள்ள, விஸ்கான்சின் - மேடிசன் பல்கலையின் ஆராய்ச்சியாளர் ஸ்டீபன் மேயர்ஸ் நடத்திய ஆய்வில், சில ஆச்சரியமான விஷயங்களை தெரிவித்துள்ளார்.
இதன்படி, நிலவு, ஒவ்வொரு ஆண்டும், பூமியிலிருந்து, 3.82 செ.மீ., துாரம் விலகிச் செல்வதாக, அவர் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்ந்தால், சில லட்சம் ஆண்டுகளுக்கு பின், பூமியிலிருந்து நிலவு, நீண்ட துாரம் விலகிச் சென்று விடும்.
இதனால், பூமியின் சுற்றும் வேகத்தில் மாற்றம் ஏற்பட்டு, அதன் காரணமாக, ஒரு நாளைக்கு, 24 மணி நேரம் என்பது, 25 மணி நேரமாக மாற வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளார், ஸ்டீபன் மேயர்ஸ்.