18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் நாளை விசாரணை..தீர்ப்பு என்னவாக இருக்கலாம்...?

Share:
18 சட்டமன்ற உறுப்பினா்கள் தகுதி நீக்கம் வழக்கை 3வது நீதிபதியான சத்யநாராயணன் நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்கிறாா். 

அ.தி.மு.க.வைச் சோ்ந்த 18 சட்டமன்ற உறுப்பினா்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில் சென்னை உயா்நீதிமன்றம் கடந்த 14ம் தேதி தீா்ப்பு வழங்கியது இரண்டு நீதிபதிகளும் மாறுபட்ட தீா்ப்பை வழங்கிய நிலையில் வழக்கு 3வது நீதிபதிக்கு மாற்றம் செய்யப்பட்டது. 3வது நீதிபதியாக விமலா நியமனம் செய்யப்பட்டாா். 

இந்நிலையில் தகுதி நீக்கம் செய்யப்பட்டவா்களில் 17 சட்டமன்ற உறுப்பினா் உச்சநீதிமன்றத்தை நாடினா். 3வது நீதிபதி மீது நம்பிக்கை இல்லை என்று தொிவித்த மனுதாரா்கள் வழக்கை உச்சநீதிமன்றத்திற்கு மாற்றம் செய்ய வேண்டும் என்று தொிவித்தனா். விசாரணை முடிவில், வழக்கை மாற்றம் செய்ய நீதிபதிகள் மறுத்து விட்டனா். இருப்பினும் 3வது நீதிபதியாக நியமிக்கப்பட்ட விமலாவுக்கு பதிலாக மற்றொறு மூத்த நீதிபதியான சத்ய நாராயணனை நியமனம் செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது. 

மேலும் வழக்கின் விசாரணையை விரைந்து முடிக்க வேண்டும் என்றும் கடந்த 27ம் தேதி தொிவித்திருந்தது. இதனைத் தொடா்ந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட சட்டமன்ற உறுப்பினா்கள் சாா்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் கடிதம் ஒன்று வழங்கப்பட்டது. அந்த கடிதத்தில் சட்டமன்ற உறுப்பினா்கள் மக்கள் பணி ஆற்றாமல் உள்ளோம். எனவே இந்த வழக்கை விரைவில் பட்டியலிட வேண்டும் என்று கோரியிருந்தனா்.இந்நிலையில் 3வது நீதிபதி சத்யநாராயணன் நாளை சட்டமன்ற உறுப்பினா்கள் தகுதி நீக்க வழக்கை விசாரிப்பாா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் ஏற்கனவே விசாரணைகள் போதிய அளவில் நிறைவு பெற்று விட்டதால், வழக்கின் முந்தைய பதிவுகளை படித்து பாா்த்து 3வது நீதிபதி தனது கருத்தை முன் மொழிய வாய்ப்பு உள்ளது. அல்லது 3வது நீதிபதி மீண்டும் வழக்கை முழுமையாக விசாரணை நடத்தி தீா்ப்பு வழங்கலாம் என்று கூறப்படுகிறது.

தீர்ப்பு என்னவாக இருக்கலாம்...?

* மத்திய அரசுக்கு சாதகமாகவும்,மாநில அரசுக்கு எதிராகவும் இருக்கும்

* தகுதி நீக்கம் செல்லாது சபாநாயகர் முடிவு இறுதி அல்ல.

* அடுத்த ஆண்டு தேர்தல் சந்திக்க வாய்ப்பு.