விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் சாமி 2 ரிலீஸ் எப்போது?

Share:
ஹரி இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் வெளியான படம் ‘சாமி’. இந்தப் படம் மிகப்பெரிய ஹிட்டானது. ஆகையால் இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க முடிவு செய்தார் இயக்குனர் ஹரி. அதன்படி தற்போது இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. முக்கால்வாசி படப்பிடிப்பு முடிந்துவிட்டது. இந்தப் படத்திலும் விக்ரம் ஹீரோவாக நடித்து வருகிறார். இந்தப் படத்தில் விக்ரம் தவிர மற்ற நடிகர்கள் பெரும்பாலும் மாற்றப்பட்டுள்ளனர். ஹீரோயினாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார்.

ஹரி இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் ‘சாமி 2’ வரும் ஆகஸ்ட் மாதம் வெளியாகவுள்ளது.நடிகர் பாபி சிம்ஹா வில்லனாக நடிக்கிறார்.
saamy 2 movie  release on august 29
கதையும் இன்றைய சூழலுக்கு ஏற்ப மாறியிருக்கிறது. இந்த படத்தில் விக்ரம், அப்பா - மகன் என இரண்டு ரோலில் நடிக்கிறார். தற்போது படத்தின் கடைசி பாடல் காட்சி படமாக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையே இறுதிகட்ட பணிகளையும் கவனித்து வருகிறார் இயக்குனர் ஹரி. படத்தை ஆகஸ்ட் மாதம் வெளியிட திட்டமிட்டுள்ளார் இயக்குனர்ஹரி.