பதஞ்சலி நிறுவனத்தில் 50,000 பேருக்கு வேலைவாய்ப்பு!

Share:
யோகா குரு பாபா ராம்தேவ் நடத்தும் பதஞ்சலி நிறுவனத்தில் சேல்ஸ்மேன் வேலைக்கு 50,000 காலி பணியிடங்கள் உள்ளதாக தெரிவித்துள்ளார்.இந்த வேலைக்கு விண்ணப்பிக்க கல்வித் தகுதி +2 வரை படித்திருக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. சம்பளம் ரூ.8000 முதல் ரூ.15000 வரை அளிக்கப்படும் என கூறியுள்ளார்.

பாபா ராம்தேவ், ஓர் இந்திய இந்து சமய துறவியாவார். இவர் பதஞ்சலி முனிவர் இயற்றிய வழியில் யோகா பயில்விப்பதாக கருதப்படுகிறது. அவர் பல பகுதிகளில் நடத்தும் யோகா வகுப்புகளில் பெரும் திரளான மக்கள் பங்கு கொள்கின்ரேணர்.இந்தியாவில் பரவலாக உள்ள ஊழலை எதிர்த்து போராட பாரத் சுவாபிமான் ஆந்தோலன் என்ற அமைப்பை நிறுவியுள்ளார். சுதேசி சிக்சா,சுதேசி சிகித்சா என்ற முழக்கங்களுடன் இந்தி மொழி முதன்மை மொழியாக அமைய வேண்டும் என்றும் இந்திய ஆயுர்வேதம் முதன்மை சிகிச்சை முறையாக இருக்க வேண்டும் என்றும் தமது கொள்கைகளைப் பரப்பி வருகின்றார்.

இந்தியாவின் பாரம்பரிய உணவுப் பொருட்கள் மற்றும் இயற்கையான பொருட்களை குறைந்த விலையில் பதஞ்சலி நிறுவனம் விற்பனை செய்யும் என்று ராம்தேவ் அறிவித்தார்.

ரசாயன கலப்பு இல்லாமல் பிஸ்கட், கிரீம்கள், பற்பசை, ஆயுர்வேத மருந்துகள், நெய், எண்ணெய், சோப் உள்பட அனைத்து வகை பொருட்களையும் பதஞ்சலி நிறுவனம் விற்பனை செய்து வருகிறது. முதலில் ஆயுர்வேத மருந்துகளை மட்டுமே விற்ற இந்த நிறுவனத்தின் இயற்கை பொருட்களுக்கு மக்களிடம் மிகுந்த ஆதரவு வந்துள்ளது.