காலாவதியானது காலா- தமிழ்ராக்கர்ஸில் வெளியீடு!

Share:
மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகி உள்ள சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ‘காலா’ படம், தமிழ்ராக்கர்ஸ்இணையதளத்தில் வெளியானதால் திரையுலகினர் அதிர்ச்சியடைந்துள்ளனர். 
ரஜினி நடிப்பில் பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி உள்ள திரைப்படம் ‘காலா’. தனுஷ் தயாரித்துள்ள இந்தத் திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இப்படத்தில் ரஜினியுடன் ஹியூமா குரேஷி, ஈஸ்வரி ராவ், சமுத்திரக்கனி உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். 
தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் உருவாகி உள்ள இந்தத் திரைப்படம் உலகம் முழுவதும் ஜூன் 7 ஆம் தேதி வெளியாகின்றது. இதனிடையே, இந்தத் திரைப்படம் அமெரிக்கா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் முன்னதாக வெளியிடப்பட்டுள்ளது. 
இந்நிலையில், காலா படத்தை தமிழ்ராக்கர்ஸ் இணையதளம் முதல் நாளின் முதல் ஷோ முடிவதற்கு முன்பாக தனது இணையதளத்தில் வெளியீட்டு திரை உலகினரை அதிர்ச்சியடைய செய்துள்ளது. முன்னதாக, ரசிகர் ஒருவர், காலா படத்தின் முதல்பாதியை திரையரங்கில் இருந்து பேஸ்புக்கில் நேரலை செய்து, கைதுசெய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. #kaalaa tamilrockers